பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

123


தீர்மானித்து வந்தனர். கதிரியக்க ஐசோடோப்புகள் கண்டறியப் பெற்றபிறகு இந்நிலை மாறிவிட்டது.முதிர்ந்த தாவரங்களிலுள்ள பாஸ்வரச்சத்து மண்ணில் இயற்கையில் படிந்து கிடக்கும் பாஸ்ஃபேட் உப்பிலிருந்து வந்ததா, அல்லது உழவர்கள் இடும் செயற்கை உரத்திலிருந்து வந்ததா என்பது அறுதியிடப் பெற்றது. கதிரியக்க ஐசோடோப்புகள் தாவரங்களுக்கு மண்ணின் மூலமும் அங்கிருந்து வேர்களுக்கும் அவற்றிலிருந்து தாவரங்களுக்கும் எந்த அளவில் செல்லுகின்றன? எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றன? என்பதை வழி-துலக்கி அறியப் பயன்படுகின்றன. தாவரங்களின் வளர்ச்சிப் பருவங்களில் எப்பருவத்தில் உரம் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று தீர்மானிக்கவும், தாவரங்களுக்கு முழு நன்மை பயக்க வேண்டுமானால் உரத்தை எங்கு எவ்வாறு இடவேண்டுவென்றும், நாட்டின் பல்வேறுபட்ட மண்ணிற் கேற்றவாறு எவ்வகை உரங்கள் சிறந்த நன்மை பயக்கின்றன என்பதை நிலை நிறுத்தவும் இவை பயன்படுகின்றன. -

2. உயர்வகைத் தாவரங்கள்: ஒட்ஸ் என்ற ஒரு வகைத் தானியத்தில் நியூட்ரான்களைச் செலுத்திப் பயிர் செய்து, துருநோய் (Rust) என்ற ஒரு வகைத் தாவர நோயினால் பாதிக்கப் பெறாத புதுவகை ஒட்ஸைப் படைத்துள்ளனர். சடுதி மாற்றத்தினால் (Mutation) அதிகவிளைச்சல் தரக்கூடிய புதிய வகைத் தாவரங்களை உண்டாக்கியுள்ளனர். 30 சதவிகிதம் அதிகமாக விளச்சல் தரக்கூடிய ஒரு வகைக் கடலை, (Pea nut) உற்பத்தி செய்யப் பெற்றுள்ளது. நுட்பமான தாவரங்களான காளான் போன்றவைகளில் ஏற்படும் மாறுபாடுகளும் மனிதருக்கு உதவக்கூடும். இன்று தயாராகும் பென்சிலின் என்ற மருந்தில் பெரும் பகுதி ஒரு சிறந்த வகைக் காளானிலிருந்து உண்டாக்கப் பெறுகின்றது. இந்தக் காளான் வகை அணுக்கதிர்களால் சடுதி மாற்றம் அடைந்த ஒரு வகை உயிராகும். இவ்வாறு செயற்கை முறையில் தாவர மாறுபாடுகளைச் செய்தல் உழவுத் துறையில் ஒரு புது யுகத்தைத் தொடங்குகின்றது.

3. தாவர நோய் பற்றிய ஆராய்ச்சி: கடந்த ஒரு சில ஆண்டுகளாகத் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும்,