பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பெறுகின்றன. இவை தொப்பியிலிருந்து தொங்கும் குழல் வழியாக உயிரியத்தின் மூலம் வெளியேற்றப் பெறுகின்றன. இந்த உயிரியம் தூய்மை செய்யும் கருவியினை அடைந்து அங்குக் கரித்துள்ளால் தூய்மையாக்கப் பெற்றுத் தேவையான ஈரப்பசையுடன் மீண்டும் உடையினை அடைகின்றது.

விமானத் தளத்தில் கவனம்: விண்வெளி வீரரின் உடல் நிலையைப் பூமியிலிருந்து தொடர்ந்து கவனிப்பர். விண்வெளி வீரரின் உடலில் பல பகுதிகளில் ஒட்டிவைக்கப் பெற்றுள்ள உணர்விகள் (Sensors) என்ற சிறு சிறு உறுப்புகள் தொலை நிகழ்ச்சி அறிகருவியுடன் இணைக்கப் பெற்றிருக்கும். இக்கருவி விண்வெளி வீரரின் இதயத் துடிப்பு, சுவாசிக்கும் வேகம், குருதியழுத்தம், நாடித்துடிப்பு போன்ற உடல் நிலைகளைப் பூமிக்கு அறிவித்துக் கொண்டேயிருக்கும். விண்வெளி வீரரின் உறக்க நிலையிலும் விழிப்பு நிலையிலும் இந்த எடுகோள்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

விண்வெளிக் கலத்துக்குள்ளிலிருக்கும் வானொலிப் பரப்பி, வானொலி ஏற்பி ஆகிய சாதனங்களைக் கொண்டு பூமியில் விமான தள நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பர். இவற்றைத் தவிர விண்வெளிக் கலத்தினுள் பொருத்தப் பெற்றுள்ள தொலைக்காட்சி அமைப்பால் விண்வெளி வீரரின் செயல்களனைத்தையும் பூமியிலிருந்த வண்ணம் கண்டறியும் வாய்ப்புகளும் உள்ளன.

பயிற்சி பெறல்: மேற்கூறிய அநுபவங்களைப் பெறுவதற்கு விண்வெளி வீரர்கள் பூமியில் தகுந்த பயிற்சியினைப் பெறுகின்றனர். உடற்கட்டும் உடல் நலமும் உள்ளவர்களே இதற்குப் பொருத்தமானவர்கள். சாதாரணமாக இப்பயிற்சி ஐந்து ஆண்டுக் காலம் தொடர்ந்து நடைபெறும். இருபத்தெட்டு வயதிற்குமேல் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டும் 162.5 செ.மீ, முதல் 117.5 செ.மீ. உயரமும் உள்ளவர்களே இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவர். இந்த உயரத்திற்குரிய சராசரி எடையை விடச் சற்றுக் குறைவான எடையுள்ளவர்களாகவும் இருக்கலாம்.

இவர்கள் பட்டப்படிப்புடன் வானஇயல், இயற்பியல், வேதியியல், பொறியியல், மருத்துவ இயல் முதலிய துறைகளிலும்.