பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

141


வெளிவரும் பானத்தைப் பருகுதல் வேண்டும். உண்ணவேண்டிய உணவும் பசை வடிவில் (பல்பசை வைத்திருப்பது போன்ற குழல்களில்) குழல்களில் வைக்கப் பெற்றிருக்கும். குழல்களை வாயில் திணித்து கொண்டு அமுக்கி உணவை உண்ண வேண்டும். வயிற்றுக்குச் செல்லும் உணவு வயிற்றின் அடிப்பகுதியை அடையாமல் மேல் மட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும். ஆயினும், செரிமானம் ஆவதில் யாதொரு இடையூறும் ஏற்படுவதில்லை. எடையற்ற நிலையில் உடலின் உள்ளுறுப்புகள் எவ்விதத் தீங்குமின்றி நன்றாகவே இயங்குகின்றன.

4. சுவாசிக்கும் முறை: விண்வெளியில் சுவாசிப்பதற்கு உயிரியம் இன்றியமையாததாகின்றது. விண்வெளிக் கலங்களில் திரவ வடிவில் உயிரியத்தை எடுத்துச் செல்லுகின்றனர். நம் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் உயிரியமும், 78 சதவிகிதம் நைட்டிரஜனும், ஒரு சதவிகிதம் ஆர்கான் என்ற வாயும் உள்ளன. விண்வெளியிலிருக்கும் போது இந்த விகிதத்தில் வாயுக்கள் கலப்பதில்லை. தேவையான காற்றழுத்தம் இருக்கும் வரையில் நைட்டிரஜன் நம் குருதியில் எளிதாகக் கலந்து விடுகின்றது. அழுத்தம் குறையுங்கால் அது குருதியில் கலக்காமல் குமிழிகளாகத் தோற்றம் அளிக்கின்றது. ஆகவே, உயிரியத்துடன் கலப்பதற்கு நைட்டிரஜனுக்குப் பதிலாக, மிக மெல்லி வாயுவான பரிதியம் (Helium) சேர்க்கப் பெறுகின்றது. பரிதியம் குருதியுடன் நன்றாகக் கலக்கக் கூடிய வாயுவாகும். எனவே, குமிழிகள் தோன்றுவதில்லை. தவிர, பரிதியம் நைட்டிரஜனை விட இலேசாக இருப்பதால் விண் வெளிக்கலத்தில் எடுத்துச் செல்லுவது எளிதாகும்.

உடை வசதிகள்: விண்வெளி வீரர்கள் விண்வெளி உடையை (Space suit) அணிந்து கொள்ள வேண்டும். இஃது இரு உறைகளாலான இரப்பர் சேர்ந்த நைலானாலானது. இந்த உடை விண்வெளி வீரரின் உடல் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கும். உடலின்மீது படியும் உள்ளுறையில் ஏராளமான துவாரங்கள் இருக்கும். இந்த உடைக்குள் இருக்கும் பொழுது அருகிலுள்ள குழல் வழியாக உயிரியம் செலுத்தப் பெறுகின்றது. இதன் காரணமாக உடலைச் சுற்றித் தேவையான காற்றழுத்தம் அமைகின்றது. தவிர, வியர்வை துர்நாற்றம் இவை வெளியேற்றப்.