பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


2. விண்கல் பம்பர் (Meteor bumber) என்ற சாதனத்தை அமைத்து விண் கற்கள் கூண்டினைத் தாக்கா வண்ணம் செய்யலாம். கூண்டின் சுவரைப் பல அடுக்குத் தகடுகளால் அமைத்து விட்டால் விண் கற்கள் அதில் படுங்கால் தெளித்துப் போகின்றன.

3. மின்சார அமைப்பில் நேரிடும் கோளாறுகள், தீவிபத்து, திடீரென்று அறையில் அழுத்தம் குறைதல், விசைக் கருவியிலும் சுக்கானிலும் (Huli) ஏற்படும் கோளாறுகள்-இவற்றைச் சமாளிக்க வழிவகைகள் செய்தல் வேண்டும்.

4 நாய்கள், குரங்குகள், சுண்டெலிகள், எலிகள் முதலிய பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி, எடையின்மை மனிதனைக் கொல்லாது என்று தெளிந்தனர்.

விண்வெளி அதுபவங்கள்: புதிய சூழ்நிலைக்கு மனிதன் செல்லும் போது புதிய அநுபவங்கள் நேரிடுகின்றன.

1. அதிக எடை: பூமியிலிருந்து உயரக் கிளம்புகையில் ஆற்றல் வாய்ந்த நேர்வேக வளர்ச்சியின் காரணமாக (Acceleration) மனிதனுடைய எடை பன்மடங்கு அதிகரிக்கும் உணர்ச்சி ஏற்படும். ஒன்பது மடங்கு பளுவிற்கு உட்பட வேண்டியிருக்கும். இந்த மிகுதியான உடை உணர்ச்சி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் நீடிக்கும். இராக்கெட்டு கிளம்பிய நேரத்திலிருந்து அது சுற்று வழியை அடையும் வரை விமானி எடை மிகுந்த நிலையைச் சமாளிக்க வேண்டும்.இதைச்சமாளிக்க மையவிலக்கு விசைக் கருவியினைக் கொண்டு பூமியில் இந்நிலையை உண்டு பண்ணி பயிற்சி தரப் பெறுகின்றது. சோதனையின்பொழுது மருத்துவர்கள் அருகிலிருப்பர்.

2. எடையின்மை: இராக்கெட்டின் பிடியிலிருந்துத் துணைக் கோள்கள் பூமிக்குக் கிடைமட்டமாக வட்டச் சுற்று வழியில் இயங்கிக் கொண்டிருக்கும்போது பொருள்கட்கு எடையின்மை இராது. இதைச் சமாளிக்கும் நிலையில் பயிற்சி அளிக்கப் பெறுதல் வேண்டும்.

3. உணவு முறைகள்: எடையற்ற நிலையில் உணவு முறை பெரிதும் மாறுபடுகின்றது. பாலிதீன் புட்டிகளில் வைக்கப் பெற்றிருக்கும் பானங்களைப் புட்டிகளை அழுத்திப் பீறிட்டு