பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் - இன்று

151


கொண்டு செலுத்தியது. இதிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும் இதுவும் இராக்கெட்டிலிருந்து கழன்று கொண்டது.

மூன்றாவது பகுதி விண்கலத்தைத் தாங்கிய வண்ணம் பூமியைச் சுற்றி வந்தது. சந்திரனை நோக்கிப் பாய்வதற்கு முன் அஃது இரண்டரை மணி நேரத்தில் 18 தடவை பூமியை வலம் வருதல் வேண்டும். இப்பொழுது விண்வெளி வீரர்கள் எல்லாச் சாதனங்களையும் சரி பார்த்துக் கொண்டனர். இங்ஙனம் சரி பார்த்த பிறகு இராக்கெட்டின் மூன்றாவது பகுதி இயங்கியது. இந்நிலையில் அம்புலியை அடைவதற்கு 401, 280 கி.மீ தூரத்தைக் கடந்தாக வேண்டும். இப்பொழுது விண்கலம் விநாடிக்கு 1,923 கி.மீ. வீதம் சென்று கொண்டிருந்தது.

விண்கலம் சந்திரமண்டலத்தை நோக்கி விரையும் பொழுது தான் மிகவும் கடினமான செய்லை நிறைவேற்றினர் அம்புலி வீரர்கள். தாங்கள் இருந்த விண்கலத்தை இராக்கெட்டினின்றும் தனியே பிரித்தனர். விண்கலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கையிலேயே தலைமை விமானி ஆர்ம்ஸ்ட்ராங் அதனை அரைவட்டமாகச் சுழன்று திரும்பச் செய்தார். இங்ஙனம் திரும்பிய பிறகு விண்கலத்தின் கூரிய முனை இராக்கெட்டின் மூன்றாவது பகுதியை-அதனுள் பாதுகாப்பாக இருக்கும் அம்புலிக் 'கழுகை’-நோக்கியபடி இருந்தது. இந்நிலையில் அவர் அப்படியே இராக்கெட்டினை அணுகி விண்கலத்திலுள்ள கட்டளைப்பகுதியின் கூரிய முனையுடன் பொருந்திக்கொள்ளச் செய்தார். பிறகு அதனை இராக்கெட்டினின்றும் பாதுகாப்பாக விடுவித்தார். இப்பொழுது விண்கலமும் பணிப்பகுதியுடன் சேர்ந்த (கட்டளைப் பகுதியும்) அம்புலி ஊர்தியும் இணைந்த வண்ணம் சந்திரனை நோக்கி விரைந்தன. இப்பொழுது இராக்கெட்டின் மூன்றாவது பகுதியும் விண்வெளியில் கழற்றி விடப்பெற்றது, இனி அதற்கு வேலை இல்லாததால்.

இணைந்த வண்ணம் அம்புலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த விண்கலமும் அம்புலி ஊர்தியும் படிப்படியாகச் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல் சூழ்நிலையை நெருங்கின. பிறகு அந்த ஆற்றலின் காரணமாகச் சந்திரனைச் சுற்றி வந்தன. சந்திரனில் இறங்கப் போகும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் அல்டிரனும் தாங்கள் இருந்த விண்கலத்தினின்றும் குகை போன்ற ஓர்