பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

153


கலம் மேல் நோக்கிக் கிளம்பி விரைவில் அதன் (சந்திரனின்) ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுப் பூமியை நோக்கி விரைந்தது. மணிக்கு 8,736 கி. மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த விண் கலத்திலும் இருபகுதிகள் இருந்தன. பூமியைச் சுற்றியுள்ள வழி மண்டலத்தை நெருங்குவதற்குச் சற்று முன்னதாக தேவையற்ற ஒரு பகுதியைக் (பணிப்பகுதியை) கழற்றிவிட்டனர். அது வாயுமண்டலத்தைக் கடக்கும்போது எரிந்து சாம்பராகி விட்டது. விண்வெளி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டிலும் (கட்டளைப் பகுதி) மணிக்கு 40, 000 கி. மீ. வேகத்தில் பூமியை நெருங்கியது. இந்தக் கலம் வெப்பமடைந்து எரிந்து சாம்பராகாதிருக்க வெப்பம் தடுக்கும் கவசம் ஒன்றிருந்தது. விண் கலம் 5000"F வெப்பத்துடன் பழுக்கக் காய்ச்சியது போன்றிருந்தாலும் விண்வெளி வீரர்கள் இருந்த அறை குளிர்ச்சியாகவே (81°F) இருந்தது.

விண்கலம் பூமியிலிருந்து 7.2. கி.மீ. உயரத்திலிருந்தபோது இரண்டு குதி குடைகள் (Parachutes) விரிந்து கொடுத்துக் கலத்தின் வேகத்தைத் தணித்தன. 3 கி.மீ. உயரத்திலிருந்தபோது மேலும் மூன்று குதி குடைகள் விரிந்து கொடுத்தன. இதனால் விண்கலம் அதிர்ச்சியின்றிப் பசிபிக் மாக்கடலில் குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்தது. வட்டமிட்ட வண்ணமிருந்த ஹெலிகாப்டர் விமானங்களுள் ஒன்று விண்வெளி வீரர்களை மீட்டு அருகிலிருந்த போர்க்கப்பலில் கொண்டு போய்ச் சேர்த்தது. மாலுமிகள் விண்கலத்தைப் பாதுகாக்கும் பொறுப் பேற்றனர்.

விண்வெளிப் பயணம் தொடங்கினபோது 36 மாடிக்கட்டத்தின் உயரம் இருந்த அமைப்பு அப்பயணம் நிறைவு பேற்ற போது 3.425 மீட்டர் உயரமுள்ள விண்கலம் மட்டிலும் எஞ்சி நின்றது.

[][][]

இவ்விடத்தில் ஒரு செய்தி நினைவு கூரத்தக்கது.கிட்டத்தட்ட நூற்றாண்டுகட்கு முன்னர் ஜூல்ஸ் வெர்னர்(Jules Verner) என்ற அறிவியல் புதின ஆசிரியர் மூன்று பேர் கொண்ட விண்வெளிப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1865இல் வெளியிடப்பெற்ற "அம்புலியைச் சுற்றி" என்ற தமது புதினத்தில் குறிப்பிட்டுள்ள சந்திரனைச் சுற்றி வரும் அம்புலி ஊர்தி ஓரளவு.