பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

165



கள் +XYநிறக்கோள்களும், பெண்ணின் உடலிலுள்ள உயிரணுக்களில் 22 இணைகள் + XX நிறக்கோல்களும் உள்ளன என்பது தெளிவாகின்றது. XX, XY நிறக்கோல் பாலை அறுதியிடும் நிறக்கோள்கள் (Sex chromosomes) என்றும் மற்றைய 44 நிறக்கோல்கள் 'ஆட்டோ சோம்கள்' (Autosomes) என்றும் வேறுபடுத்தி வழங்கப்பெறும்.

கரு வளரும்போது நான்காவது வாரத்தில் ஒதுக்கப் பெற்றுப் பெண்ணின் சூற்பைகளிலும் ஆணின் விரைகளிலும் தங்கும் உயிரணுக்கள் குமரப் பருவத்தில் முறையே முட்டையணுக்களாகவும் விந்தணுக்களாகவும் முதிர்ச்சியடையும் பொழுது 'குறைத்துப் பகுத்தல்' (Reduction division) என்ற ஒரு முறையில் பிரிவுபடும். இவ்வாறு பிரியும் பெண்ணின் முட்டையில் ஒவ்வொன்றும் 22 + X நிறக்கோல்களைக் கொண்டிருக்கும். 23-வது இணையிலுள்ள நிறக்கோல்கள் இரண்டாகப் பிரிவுற்று ஒவ்வொரு முட்டையிலும் 22 + X நிறக்கோல்கள் வீதம் அமைவதே இதற்குக் காரணம் ஆகும். இதனால் பெண்ணிடம் உண்டாகும் முட்டைகள் யாவும் ஒரு வகையைச் சார்ந்தனவே என்பது புலனாகும். ஆனால், ஆணின் உயிரணு முதிர்ச்சியடைந்து பிரியும் பொழுது X நிறக்கோல் ஒரு விந்தணுவிலும் Y நிறக்கோல் பிறிதொன்றிலுமாகச் செல்லும். ஆகவே, ஆணிடம் இருவகையான விந்தணுக்கள் உண்டாகின்றன. ஒரு வகையில் 22 + X நிறக்கோல்களும் மற்றொரு வகையில் 22 + நிறக்கோல்களும் அடங்கியிருக்கும்.

முட்டைகள் கருவுறுங்கால் நிகழ்வது என்ன? X நிறக்கோல்கள் அடங்கிய விந்தணு ஒன்று முட்டையில் புகுந்து கருத்தரித்தால் கருவுற்ற முட்டையில் 44 + X + X நிறக்கோல்கள் இருக்கும். இது பெண்மகவாகும். Y நிறக்கோல் அடங்கிய ஒன்று முட்டையில் புகுந்து கருத்தரித்தால் கருவுற்ற முட்டையில் 44 + X +Y நிறக்கோல்கள் இருக்கும். இஃது ஆண்மகவாகும். எனவே, மேற்கூறியவற்றால் ஆணின் விந்தணுக்களே பிறக்கும் குழவியின் பாலை அறுதியிடுகின்றன என்பது தெரிகின்றது. ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் காரணமாக இருப்பவன் ஆணே; பெண்ணைக் குறை கூறி மற்றொருத்தியை ஆண்மகவு பெறுவதற்கென இரண்டாக்தாரமாக மனப்பது அறியாமை. இதில் ஆணையும் குறை கூறுவதற்-