பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

171


இந்தியத் தாயின் ஆசியால் 1983 ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் தில்லி மாநகரில் கால்வழி இயல் பற்றிய ஒர் அனைத்துலக மாநாடு (Fifteenth International Congress of Genetics) பத்து நாட்கள் நடைபெற்றது. ஐம்பது நாடுகளிலிருந்து சுமார் 2500 கால்வழி இயல் அறிஞர்கள் இதில் கலந்து கொண்டு தாம் கண்டறிந்த உண்மைகளையும் இனி தாம் காணவேண்டிய உண்மைகளையும் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்; கலந்து ஆராய்ந்தனர். முன்னேற்றமடைந்த நாடுகளில் ஆராய்ந்து கண்ட கால்வழி இயல் உண்மைகளை முன்னேறி வரும் நாடுகளின் நன்மைகட்கு எங்ங்னம் பயன்படுத்தலாம் என்று கலந்து பேசினர். இந்த மாநாட்டில் நோபெல் பரிசு பெற்ற மூன்று கால்விழி இயல் அறிஞர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். மாநாட்டில் உலக அறிஞர்களின் கவனத்திற்கு வந்த ஒரு சில உண்மைகளை ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.

புற்று நோய் விளைவிக்கும் ஜீன் : ஒரு சில அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு வசதியும் வாய்ப்பும் சுதந்திரமும் வேண்டும் என்று குறிப்பிட்டனர். இந்தியாவில் பிறந்து கனடாவில் (ஒட்டாவா) அறிவியல் ஆய்வுப் பணியிலுள்ள டாக்டர் சரண் ஏ. நாரங்க் என்பார். 'துள்ளிக் குதிக்கும் ஜீனை' ஒரு சோதனைக் குழலில் செயற்கை முறையில் தயாரித்தவர். இந்த ஜீன் புற்றுநோய் விளைவிக்கும் ஜீன்களைப் பற்றிய தெளிவான உண்மை காண்பதில் கொண்டு செலுத்தும் என்று விளக்கினார். இவர் 'மானிட ஜீன்' ஒன்றையும் செயற்கை முறையில் தயாரித்தவர். இஃது 'இன்சுலின்’ சாரத்தை விளைவிக்க உதவுவது. தாம் ஒட்டாவாவில் செய்து முடித்த இன்சுலின் ஆய்வுப் பணியை இந்தியாவில் செய்திருந்தால் அமெரிக்காவில் தாம் எடுத்துக் கொண்ட காலத்தில் பாதியில் முடித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இவர் தமக்குச் சுதந்திரம் அளித்துத் தம் பணியில் அதிகாரவர்க்கம்! குறுக்கிடாதிருந்தால்தான் இது சாத்தியமாகும் என்றும் அப்பொழுதுதான் "தாம் காணும் அறிவியல் கனவை" நனவாக்க முடியும் என்றும் விளக்கினார். இங்கு ஆய்வுப் பணிக் குரிய நிலைமைகள் சரியாக இல்லாமையால்தான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர்த் தாம் இந்தியாவை