பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


மட்டிலும் இப்பிறவிகளில் ஒரு முக்கிய கூறாக அமையவில்லை என்றும், ஆண் வழியாகவும் இக்கூறு அமைந்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் அறிகின்றோம். இரண்டு முறை மணம் புரிந்து கொண்ட மனிதனுக்கு முறையே இரட்டைப் பிறவிகளும் மூன்று குழவிப் பிறவிகளும் அதிகமாக ஏற்பட்ட தாகச் சான்று கிடைத்துள்ளது.

இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகள் : முக்கோவைகள் (Triplets) நான்கு கோவைகள் (Quadruplets) ஐந்து கோவைகள் (Quintuplets), எண் கோவைகள் (Octuplets), ஐந்திற்கு மேற்பட்ட குழவிகள் பிறந்தன என்று கால்வழியியல் அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவற்றைப்பற்றி ஈண்டு விளக்குவதற்கு நேரம் இல்லை.19

10. கால்வழி இயல்

ஊனக் கண்ணுக்குப் புலனாகாத அணுபற்றிய அறிவியல் அணுவியல் (Atomics) என்பது போல, 'ஜீன்' பற்றிய அறிவியல் கால்விழி இயல் (Genetics) ஆகின்றது. ஜீன்கள் குடிவழியை அறுதியிடும் கட்டடக் கற்கள். இத்துறை ஜீன்களின் இயல்புகள், அவை விளைவிக்கும் செயல்கள் இவற்றை விளக்குவதால் கால்வழி இயல் இன்று அறிவியலின் நடுநாயகமாகத் திகழ்கின்றது. காங்கேயம் காளை, பங்கன பல்லி போன்ற அதிமதுரமான கனி வகைகள்,வீரியம் கம்பு,பல்வேறுகரும்பு வகைகள்,பாதாம் அல்வா போன்ற அதிமதுரமான விதையில்லாத பப்பாளி (ஜி.டி. நாயுடு உண்டாக்கியது) இவை போன்றவை ஜீன்கள் விளைவிக்கும் அற்புத விளைபொருள்கள். இத்துறையின் அறிவு ஜீன்கள் பற்றிய அடிப்படை அறிவு ஜீன்களை நடைமுறையில் பல்வேறு துறை களில் கையாளும் முறைகள், இவை பயன்படும் பல்வேறு துறைகள், இவை பயன்படுவதற்கேற்ற வாய்ப்புகள், இவை அறிவியலறிஞர்கட்கும் சமூகத்திற்கும் விடுக்கும் சவால்கள், ஒழுக்கப் பிரச்சினைகள் ஆகியவை பற்றிய முன்னேற்றம் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றது.


19. வாழையடி வாழை மணிவாசகர் நூலகம், லிங்கி

செட்டி தெரு, சென்னை-600 001) - இயல் 20. காண்க.