பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

169


உரோம வளர்ச்சி, உயரம், உறுப்புகளின் அமைப்பு, தோற்றம் முதலானவற்றில் சாதாரணமாக, சகோதர சகோதரிகளிடம் காணப்பெறுவதைப் போலவே, இவையும் வேறுபாடுகளுடன் அமைகின்றன. இத்தகைய இரட்டைப் பிறவிகள் சகோதர இரட்டைகள் எனவும் வழங்கப்பெறும்.

இயல்பிகந்த இரட்டையர் : கருவுற்ற முட்டையிலுள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரியும் பொழுது முற்றிலும் இரண்டாகப் பிரியாமல் போகுமாயின் இயலபிகழ்ந்த இரட்டைகள் பிறப்பதற்கு ஏதுவாகும். இவை வெவ்வேறு நிலைகளில் ஒட்டிய பாங்கில் பிறக்கும். இவற்றை ஒட்டுப் பிறவிகள் (Conjoined twins) என்று வழங்குவர். முதன் முதலில் இத்தகைய பிறவிகளில் ஒன்று உயிருடன் சயாம் நாட்டிலிருந்து வந்ததைக் கண்டதால் இவ்வகைப் பிறவிகளை சயாம் இரட்டையர் (Siamese twins) என்று வழங்குகின்றனர்" சாதாரணமாக ஒட்டுப் பிறவிகள் உடலில் ஒரு பகுதி (எ-டு இடுப்பு, தலை, பக்கங்கள்) ஒட்டிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் சயாம் இரட்டையர் அச்சு இரட்டையராகவே இருப்பர். ஆனால், ஒரு சிலர் சகோதர இரட்டையரின் இளஞ்சூல்கள் தொடக்க நிலையில் ஒன்றையொன்று நெருங்கி அழுந்திய நிலையில் அமைந்தால், இவ்வாறு ஒட்டுப் பிறவிகளாக அமைந்து விடும் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் ஒரு முட்டை இரண்டு விந்தணுக்களால் கருவுற்றால் இத்தகைய பிறவிகள் அமையலாம் என்றும் கூறுகின்றனர். இந்த இரண்டு கொள்கைகட்கும் யாதொரு சான்றும் இல்லை.

இரட்டைப் பிறவிகள் ஏற்படுவது ஒரு மரபுவழிப் பண்பு என்று அறியக் கிடக்கின்றது. சில குடும்பங்களில் இப்பண்பு அடிக்கடித் தலை காட்டுவதாக ஆய்வுகளால் அறிகின்றோம். ஒரே தாயிடம் தொடர்ந்தாற்போல் பல பிறவிகளுடைய குழந்தைப்பேறு ஏற்படக் காண்கின்றோம்; ஒர் ஆஸ்திரியப் பெண்மணி 69 குழந்தைகட்குத் தாயான செய்தியை அறிகின்றோம். அவள் நான்கு தடவைகள் நந்நான்கு குழந்தை களையும், ஏழு தடவைகள் மும்மூன்று குழந்தைகளையும், பதினாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத் ததாக அறியக் கிடக்கின்றது. ஆயினும், பெண்ணின் செல்வாக்கு