பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

11



மகத்திற் புக்கதோர் சனி எனக்
கானாய்¹

என்ற சுந்தரமூர்த்தியின் தேவாரத்தாலும் அறியலாம். "தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும். தூமகேது என்பதும் இதுவே. இது வட்டம், சிலை, துட்பம், தூமம் என்னும் கரந்துறை கோள்கள் நான்கனுள் ஒன்று. இதன் தோற்றம் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பர்.’’ என்ற இவற்றின் உரைப் பகுதி இதனை நன்கு விளக்குகின்றது.

அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
மிகவானுள் எரி தோன்றினும்
குளமீனொடுந் தாட்புகையினும்13

என்ற புறப்பாட்டடிகளும் இதனைக் குறிப்பிடுகின்றது. "எரி குளமீன்தாள் என்பன வான்மீன் விசேடங்கள்; இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலக வறுமைக்கு ஏதுக்கள்" என்ற உரைப்பகுதியும் இக்கருத்தைத் தெளிவாக்குகின்றது. இக்கருத்துகளையே இளங்கோ அடிகளும் நாடுகாண் காதையில்,

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்16

என்று குறிப்பிடுவர். இன்னோரன்ன குறிப்புகளினின்றும் பண்டைத் தமிழ் மக்கள் கோள்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற் புலமையுடைய வராயிருந்தனர் என்பது புலப்படும்.

சங்கப் புலவர்களில் ஒரு சிலர் கணியர்களாகவும் இருந்தனர். கூடலூர் கிழார் என்ற புலவர் ஒரு கணி. அவர் வானத்தில் ஒரு விண்மீன் தீப் பரக்கக் காற்றால் பிதிர்ந்து


14. சுந்த. தேவா7. 54:9 விண்மீன்களுள் மகம், பூரம்

உத்தரத்தின் முதற்பாதம் சிங்கராசிக்கு உரியவை.
6-ஆம் பக்கத்தில் காட்டிய படத்தில் மேடராசியி
லிருந்து அசுவதி முதல் இரண் டேகால் விண்மீன்கள்
வீதம் கணக்கிட்டு வந்தால் இதைத் தெளியலாம்.

15. புறம்-395.

16. சிலம்பு 10: அடி 102-108 காவிரியின் சிறப்பைக்

கூறுமிடத்து இக்கருத்து வருகின்றது.