பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


வாழ்ந்திருக்கக் கடவீர்!’ என்று வரம் தந்தருளி மறைந்திட்டனன்10 இத்துடன் இது நிற்க.

இனி, கோள்களின் இயக்கத்திற்கு வருவோம். கோள்களின் இயக்கத்தால்தான் இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

'வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை 11

என்ற மதுரை அளக்கர் ஞாழார் மள்ளனாரின் புறப்பாட்டடிகள் மழைக்கோளாகிய வெள்ளி தெற்கே விலகியிருப்பது மழை இல்லாமைக்கு அறிகுறியாகும் என்பதைச் சுட்டுகின்றன. இக்கருத்தையே,

வசையில் புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்12

என்ற பட்டினப் பாலை அடிகளும் தெரிவிக்கினறன. வெள்ளிக் கோள் தென் திசையில் எழுதல் தீய நிமித்தம். இந்நிகழ்ச்சி மாரி பொய்ப்பதற்கும் வற்கடம் உண்டாதற்கும் காரணம் என்பர். இதைப்போலவே வால் வெள்ளி தோன்றுவதும்,சனிமீன் புகைவதும், எரிகொள்ளி வீழ்தலும் தீக்குறிகளாகக் கொள்ளப் பெற்றிருந்தன. இவற்றை,

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கில் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர13

என்ற புறப்பாட்டடிகளால் அறியலாம். "சனி கரிய நிறமுடையனாதலின் பைம்மீன் என்றார்; சனி புகைதலாவது, இடபம் சிங்கம் மீனம் இவற்றோடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகைவீடாகிய சிங்க ராசியில் புகிள் பெருந்தீங்கு விளைவிப்பன் என்பதை,


10. இந்த ஆசிரியரின் "வைணவ உரைவளம்" பாசுரம்

44 பக்123-24 (பாரி நிலையம், சென்னை-108)

11. புறம்-388

12. பட்டினப்(1-2)

13. புறம்-117