பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பெற்ற காட்சிச் சிறப்புடைய கண்டுபிடிப்புகள் செயல் முறை ஒளிச் சேர்க்கையின் திறனை மேம்பாட்டடையச் செய்யும் சாத்தியக் கூறுகளை அளித்துள்ளன என்று இவ்வறிஞர் கூறுகின்றார்.

(5) மிகச்சிறிய தேங்காய்களை மாநாட்டில் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். இவை எலுமிச்சம் பழத்தை விடச் சிற்றுப் பெரியவை. ஒரு கொத்தில் 200 காய்கட்குமேல் அடங்கியிருக்கும். இவை இலட்சத் தீவிலிருந்து கொண்டு வரப் பெற்றவை. இவை கலப்பினச் சேர்க்கையால் உற்பத்தி செய்யப் பெற்றவை.

இத்துடன் எனது இன்றைய பொழிவைத் தலைக்கட்ட நினைக்கின்றேன். வயிற்றில் உணவுக்காகப் பசி ஏற்படுவது போல மூளையில் அறிவுக்காகப் பசி ஏற்பட வேண்டும். இத் பழக்கத்தால் ஏற்படவேண்டியது. அறிவுத்தினவு ஏற்பட்டுப் பல நூல்களைப் பயிலும் போதும் பல அறிஞர்களின் பேச்சுகளைக் கேட்கும்போதும் அறிவுத் தினவுக்கு உணவு கிடைக்கின்றது. "அறிதோறும் அறியாமை கண்டற்றால்”30 என்பது வள்ளுவம். இரண்டு நாட்களும் உங்களோடு கலந்து பேசவும், பேசுவதற்கு வேண்டிய பொருள்களைச்சிந்தித்து ஒழுங்குபடுத்திக்கொள்ளவும் வாய்ப்பு அளித்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் பொதுவாகவும் அதனைத் திறம்பட இயக்கி வரும் பேராசிரியர் டாக்டர் சிலம்பொலி செல்லப்பனுக்குச் சிறப்பாகவும் என் உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இரண்டு நீங்களிலும் யான் பேசியது குறைவு; சிந்தித்தது அதிகம். நீங்கள் கேட்டவரையில் என் பொழிவுகள் ஏதாவது நற்பயன்களை உங்களிடம் ஏற்படுத்தியிருக்குமானால் அதனை என் பேறாகக் கருதுவேன் என்று கூறி என் சொற்பொழிவின்ைத் தலைக்கட்டுகின்றேன். வணக்கம்!

20. குறள்-1110