பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

177


கோகாபெப்ச்' என்ற பானங்களின் தயாரிப்பாளர்கள் தம் பானங்களில் பயன்படுத்தப் போகும் திட்டத்தை அறிவிப்பு செய்ததால் ஏற்பட்ட விளைவு இது. 'தானு மேஷன்' (Tanumation என்ற தீவிர பனை இனிப்புப் பொருள் முதலில் மேற்கு ஆஃபிரிக்க நாட்டின் ஒரு கானகக் கனியினின்றும் எடுக்கப் பெற்றது; இப்போது இஃது அமெரிக்காவில் நுண்மங்களைக் (Bacteria) கொண்டு உற்பத்தி செய்யப் பெறுகின்றது. இது சருக்கரையைப் போல் 2500மடங்கு இனிப்புடையது(சாக்கரினும் இத்தகையதே என்பது நினைவு கூரத்தக்கது).

பல நாடுகள் சேர்ந்து அமைத்த நிறுவனம் ஒன்று ஜெனிடிக் பொறியியல் முறைகளைக் கையாண்டு தென்னை, பனை காய்களினின்றும் இத்தகைய இனிப்புப் பொருளை உற்பத்தி செய்கின்றது. நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டப் பண்ணை களிலிருக்கும் மரங்களின் காய்களையே இதற்குப் பயன்படுத்துகின்றது. "இந்தப் பயன்கள் மூன்றாவது உலக நாடுகட்குப் போவது என்பது வேறு விஷயம்" என்கின்றார் ஒரு வேளாண்மை அறிவியலறிஞர். இந்தப் பயன்கள் வளர்ந்து வரும் நாடுகட்கும் கிடைக்கச் செய்தால் அது நல்லதோர் அறிகுறியாகும்.

(3) முன்னேற்ற மடைந்த நாடுகளிலுள்ள உயிரியல்-பொறியியல் வல்லுநர்கள் தாம் பயிர்கட்கு ஏற்படும்நோய்களைத் தடுத்து நிறுத்துதல் உப்புநீர் வறட்சி இவற்றைத் 'தாங்கும்' தன்மைகள் இவற்றை விளைவிக்க முடியும் என்று மெய்ப்பித்துள்ளனர். காலகத்தை (Nitrogen) நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகளை. உண்டாக்கும் முறைகளில் நுண்பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றால் உழவர்கள் பெரும் பயன் அடைவர். உரத்திற்காகச் செலவிடும் தொகையும் இதனால் குறையும்.

(4) செயற்கை முறை ஒளிச் சேர்க்கையில் பகலவனின் ஏராளமான வெயிலின் உதவிகொண்டு வெப்ப நாடுகளிலும் குறை. வெப்பநாடுகளிலும் உணவு உற்பத்தியைப் பெருக்கலாம் என்று இந்தியவேளாண்மை ஆய்வுநிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் எச். கே. ஜெயின் யோசனை கூறினார். அணுத்திரளைகளைக் கால்வழி இயலில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்

த-12