பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கொண்டது. உலகச் சுகாதார அமைப்பு (WHO) இந்த அம்மைப் பால் உற்பத்தி செய்யுமாறு அமெரிக்க நிறுவனம் ஒன்றைக் கேட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதனை விற்பனை செய்யும் தனி உரிமையைக் கேட்டது. உலக சுகாதார அமைப்பு அதனை மறுத்து விட்டு, வேறு சில அமெரிக்க நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது: விற்பனைத் தனி உரிமை இல்லாமல் உற்பத்தி செய்யமுடியாது என்று அவை யாவும் கையை விரித்துவிட்டன.

நியூயார்க் பல்கலைக் கழகம் உலக சுகாதார அமைப் பினின்றும் நிதியுதவி பெற்று வழங்கப் பெற்ற ஏராளமான குருதி ஊன்நீரையும் கொண்டு இந்த ஆய்வை நிகழ்த்தினாலும், உலக சுகாதார அமைப்பு அமெரிக்க மருந்து நிறுவனங்களின் உதவியால் இந்த அம்மைப் பாலைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து மூன்றாவது உலக நாடுகளுக்கு வழங்க இயலாத நிலையில் உள்ளது. "ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்து கூட்டாக ஆய்வு நிகழ்த்தியது போக, இப்போது அவர்கள் எதிராளிகளாக மாறிவிட்டனர். இப்போது எல்லாம் இரகசிய மாக்கப் பெற்று 'கழுத்தறுக்கும் போட்டி’யாகிவிட்டது. "இஃது எங்கு போய் நிற்குமோ? என்பது தெரியவில்லை"-இப்படி ஓர் அமெரிக்க அறிஞர் ஓலமிடுகின்றார். இன்னொரு மலேசியா அறிவியலறிஞர் "இந்தத் தொழில் நுணுக்கம் வளர்ச்சியுறும் நாடுகளில் பொருளாதார வாய்ப்புகளைத் தரும் என்று சோதிடம் கூறுவது ஒரு கனவே” என்று தம் நம்பிக்கை யினமையைப் புலப்படுத்துகின்றார்.மலேரியா அம்மைப்பாலுக்கு நேரிட்ட கதிதான் ஏனைய தொழில் நுணுக்க உற்பத்திப் பொருள்கட்கும் நேரிடும் என்ற அச்சம் அறிவியலறிஞர் களிடையே நிலவுகின்றது. உண்மையில் வளரும் பலநாடுகள் உயிரியல் தொழில் நுணுக்கங்களால் உண்டாக்கப் பெறும் பொருள்களின் ஏற்றுமதியால் பெறும் வருமானம் குறைந்து கொண்டு வருகின்றது.

(2) புதிய இனிப்புப் பொருள்: சருக்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின்மீது ஒரு பேரிடி விழுந்துள்ளது. அமெரிக்காவின் நுரைப்புளியத்தின் துணைகொண்டு ஒருவகை உயர்ந்த சருக்கரைக் கதிர்மணித் தேம்பாகுவைத் (High structure corn syrup) தாம் தயாரிக்கும் 'கோகா கோலா'