பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

176


பல்வேறு வகைப்பட்ட ஜீன்களைப் புதிதாகப் படைக்க முடிகின்றது. அணுத்திரளை உயிரியலில் பெருங் கொடையைப் பற்றி அழுத்தம் கொடுத்துப் பேசினர் இரண்டு ஆஸ்திரேலியக் கால்வழி இயல் நிபுணர்கள். தாவர, விலங்கு,மானிட, பாக்டீரிய-உயிர்ப்பொருள்களின் அமைப்பு பற்றிப் பேராசிரியர் சி. இ ஸ்கைவ் கிராஃப்ட் என்பார் தெளிவாக எடுத்துரைத்தார், ஒருவகையான தாவர இனத்தின் உயிரணுப் பற்றிய முறைகளில் (இம்முறைகள் ஜெனிடிக் பொறியியல் பகுதியைச் சார்ந்தவை) பல்வேறு வகை ஜீன்களைப் பேரளவில் விளைவிக்கலாம் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டினார். சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத பல நுணுக்கமான கருத்துகள் மாநாட்டில் வெட்ட வெளிச்சமாயின.

மாநாட்டிற்கு எழுந்தருளியிருந்த பல அறிவியலறிஞர்கள் ஜெனிடிக் பொறியியலின் நற்பயன்கள் யாவும் மூன்றாவது உலக மாநாட்டுக்குப் பன்னெடுங்காலத்திற்குக் கனவாகவே இருக்கும் என்பதை உணர்ந்தனர். பல நாடுகளால் அமைக்கப் பெற்ற கூட்டவைகள் (Multinational Corporations) உயிரியல் - தொழில் நுணுக்க முறைகளை "இறுக்கமாகப் பூட்டி வைத்த உரிமைப் பத்திரங்களாக" (Patents) வைத்திருக்கும் என்றும் அமெரிக்காவில் மட்டிலும், "500 உயிரின நிறுவனங்கள்" உள்ளன என்றும், அவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன என்றும் கவலை தெரிவித்தனர். ஓர் இந்திய அறிவியலறிஞர் தொழில் நுணுக்க முறையிலும் பொருளாதார முறையிலும் இந்த மூன்றாவது உலக நாடுகள் முன்னேற்ற மடைந்த நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டும் நிலை இன்னும் பல்லாண்டுகட்கு நிலை பெற்றிருக்கும் என்றும் வாய் திறந்து சொல்லியே விட்டார்.

இந்த அறிவியல் மாநாட்டின் பயன்களாகவும் செய்திகளாகவும் சில முக்கியமான குறிப்புகளை ஈண்டு எடுத்துரைத்தல் மிகவும் பொருத்தமாகும்.

(1) மலேரியா அம்மைப்பால் (Malaria vaccine) உற்பத்தித் துறையில் ஒரு முக்கிய துறை நுணுக்கம் கண்டறியப் பெற்றுள்ளது. நியூயார்க் பல்கலைக் கழகம் கண்டறிந்த இந்த அம்மைப்பால் கண்டறியும் முறையை உரிமைப் பத்திரமாக்கிக்