பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அணுத்திரளை உயிரியல் : இப்பகுதி பெரும்பாலோரின் கவனத்தைக் கவர்ந்தது, பல்லுாழிகாலமாக எத்தனையோ விதத் தாவர வகைகள் காலமாற்றத்தையும், காலமாற்றத்தின் புரட்சியையும், மழையின்மையையும்,வெயிலின் கொடுமையையும் தாங்கிக் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளன. இங்ஙனம் தாக்குப் பிடித்து வந்த தாவரவகைகளின் இடத்தை அதிகப் பயன் விளைக்கும் தாவரவகைகள் பிடித்துக் கொண்டன. பேராசிரியர் ஃபிராங்கெல் என்பர் இவ்வகைத் தாவர ஜீன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறி இவ்வகைகளை அழியவிடக் கூடாது என்றும் எச்சரித்தார். இவற்றைப் பாதுகாப்பதுடன் இவற்றோடு தொடர்புள்ள ஒவ்வொரு பயிர்வகைகளையும் (Crop varieties) பாதுகாக்க வேண்டும் என்றும்அறிவுறுத்தினார். கடந்த முப்ப்து நாற்பது ஆண்டுக்காலத்தில் கோதுமை, நெல், கரும்பு முதலியவற்றின் மேம்பாட்டில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இவையெல்லாம் கலப்பினத் தின் (Hybrid) திருவிளையாடல் என்பதைக் கோடிட்டுக் காட்டின்ார். இத்துறைபற்றிய பல நுணுக்கமான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப் பெற்றன. தொ. பே. 'வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சிகளை விடாமல் கவனித்து வந்தால் அவ்வப்போது மேம்பாடு அடையச் செய்த பயிர் வகைகள், விதை வகைகள் இவற்றின் நடைமுறைப் பயன்களை அவ்வப்போது அறிந்து தெளியலாம்.

ஜெனிடிக் பொறியியல் : அண்மையில் கண்டறியப் பெற்ற ஒர் அற்புதப் பொறியியல் நுணுக்கத் துறை இது. இதனால்


ஏழாவது முறை தேவகி கருவுற்ற போது அந்தக் கருவில் வளர்ந்து பிறக்கும் குழவியைக் கம்சனிட மிருந்து தப்புவிக்கவேண்டும் என்பது எம்பெருமான் திருவுள்ளம். ஆகவே, அக்கரு வசுதேவனின் மற்றொரு மனைவியாகிய ரோகிணியின் கருப்பைக்கு மாற்றப் பெற்றுப் பலராமனாகப் பிறந்தது. இவனே கண்ண னுக்கு மூத்த பலராமன்; சங்க இலக்கியங்களில் 'தம்பி மூத்தபிரான்’ என்று குறிப்பிடப் பெறுபவன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு (புதியது புனையும் ஆற்றல் புராணத்தில் ஒரு 'கதை போல்' அடங்கிக் கிடக்கின்றது.