பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

41


கின்றாள். அதற்கு எம்பெருமானே 'நான் அட்டபுயகரத்தேன்’ என்கின்றான். எம்பெருமானோ விநாடிக்கு விநாடி தன் திருக்கோலத்தை மாற்றிமாற்றிக் காட்சி அளிக்கின்றான். அதனால் இவளுடைய வினாவும் மாறிமாறித் தொடுக்கப் பெறுகின்றது. எல்லா வினாக்கட்கும் எம்பெருமானே 'நான், அட்டபுயகரத்தேன்’ என்றே விடை தருகின்றான். இப்படி அட்டபுயகரத்துத் திருமொழியில் ஒன்பது பாசுரங்கள் நடைபெறுகின்றன.

ஒரு காட்சியை ஈண்டுக் காட்டுவேன். முன்னைய உருவம் மாறி நீலமேகச் சாமள வண்ணனாய்க் காட்சி அளிக்கின்றான் எம்பெருமான். இவன் வியூகநிலையிலுள்ள ஐயனோ என்று ஐயுறுகின்றாள் பரகால நாயகி.

கலைகளும்வேதமும் நீதிநூலும்
கற்பமும் சொற்பொருள் தானும்மற்றை,
நிலைகளும் வானவர்க் கும் பிறர்க்கும்
நீர்மையி னால் அருள் செய்து, நீண்ட
மலைகளும் மாமணி யும், மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்றிவர் ஆர்கொல்என்ன,
'அட்டபுயகரத் தேன்’ என் றாரே56

இப்பாசுரத்தில் "சாத்திரங்களாகிய கடல்களைத் தந்தருளிய கருங்கடலோ இவர்?" என்று விடுக்கும் வினாவிற்கு "அட்டபுய கரத்தேன், நான்" என்று எம்பெருமான் விடையளிப்பதைக் காண்கின்றோம்.

'கலைகள்' என்ற சொல் பொதுவாகச் சாத்திரங்களையெல்லாம் குறிக்குமாயினும், ஈண்டுச் சந்தர்ப்பத்தால் வேத பாகமாகிய உபநிடதங்களையே குறிக்கின்றது. 'வேதம்' என்ற சொல் வேதத்தின் இரண்டு பாகங்களையும் குறிப்பதாக இருப்பினும், 'கலைகள்' என்பதற்கு ஒரு பாகத்தைப் (உபநிடதத்தை) பொருளாகக் கொண்டு விட்டதனால், ஈண்டுக் கர்ம காண்டத்தை மட்டிலும் குறிப்பதாகக் கொள்ளப் பெற்றது. இதிகாசங்கள் யாவும் நீதியை உணர்த்தும் நூல்களாகும். வேதங்களில் விதிக்கப் பெற்ற கருமங்களை அநுட்டிக்கும் முறை-


56. பெரி. திரு, 2.5:8.