பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழில் அறிவியல் - அன்றும் இன்றும்


 காண்கின்றோம். இதுவே ‘மானதக் காட்சி' எனவும் வழங்கப் பெறும் ஒரு பொருளைப் பற்றி இடை விடாது நினைக்கின்ற முதிர்ச்சி நினைக்கப் பெற்ற பொருளின் உருவம்போலியாகக் கண்ணுக் கெதிரில் தோன்றுவதே உருவெளித்தோற்றமாகும். ஆழ்வார் பாசுரங்களில் இவற்றைக் காணலாம். எடுத்துக்காட்டுகளாக திருமங்கையாழ்வார் பாசுரங்களைக் காண்போம். திருமங்கை யாழ்வாருக்குப் 'பரகாலன்’ என்று பெயரும் உண்டு. அவர் நாயகி நிலையை ஏறிட்டுக் கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் போது அவரைப் பரகாலநாயகி என்று வழங்குவர் அகப்பொருள் நூலார்.

திருமங்கையாழ்வார் : காஞ்சியில் உள்ள அட்டபுயகரம்என்ற திவ்விய தேசத்திலுள்ள எம்பெருமானைப் பரகாலநாயகி சேவிக்கின்றாள். அவரது திருமேனி அழகில் ஈடுபட்டுத் தன் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றாள். இரவில் உறக்கம் வராமல் எம்பெருமானை நினைந்த வண்ணம் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கின்றாள். அவள் ஊனக் கண்முன்னே,

மின் இலங்கு திருவுருவும், பெரிய தோளும்
கரிமுனித்த கைத்தலமும், கண்ணும், வாயும்
தன்அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி 55

நிற்கும் எம்பெருமானை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ளாமல் இருக்கவும் மனம் வரவில்லை. சொந்த அறிவு அவளது ஆராய்ச்சிக்குத் துணைசெய்யவில்லை. யார் என்று வினவவும் வாய் செயற்படவில்லை. அவர் திருமுகத்தை நேரே பார்த்தும் பேசமுடியாதபடி சோதி வெள்ளம் அலை எறிந்து தள்ளுகின்றது. அதனால் முகம் நோக்கி வாய் எழும்ப முடியாத நிலை ஏற்பட்டுவிடுகின்றது அவளுக்கு. 'இவர் நம் தலைவராகவே இருத்தல் கூடும்' என்று நெஞ்சிலே ஒர் எண்ணமும் தோன்றின மையால், வினவ முடியாத நாணமும் இவளை ஆட்கொண்டு விடுகின்றது. இன்னாரெனத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அவாவோ அதிகரித்து விடுகின்றது.இந்நிலையில் அருகிலிருக்கும் வேறொருவரை நோக்கி 'இப்பெரியார் யார்?’ என்று வினவு-


55. திருநெடுந். 25