பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்—அன்று

39


என்ற பாடலால் அறிகின்றோம். இங்ங்னம் இருந்த இடத்திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் 'தொலைக்காட்சி' (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவு கண்டிருக்க வேண்டும்.53

இக்காலக் கவிதையில்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சஞ்சீவி பருவதத்தின் சாரல் காவியப் போக்கில் எழுதப்பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலையில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன்,

ஒன்றைத் தின்றால்இவ்
வுலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும்மற்
றொன்றைவா யில்போட்டால்
மன்னுலகக் காட்சிஎல்லாம்
மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே
காணலாம்.54

என்று வள்ளிக்குக் கூறுகின்றான். இந்த அடிகளைப் படிக்கும் போது வானொலியும் (Radio) தொலைக்காட்சியும் (Television) நம் நினைவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானொலியை உணர்த்துவதாகவும், மற்றொரு மூலிகை தொலைக்காட்சியைக் குறிப்பதாகவும் நாம் கருதலாம்.

6. உளவியல்: உளவியல் உண்மைகளில் ஒன்று உருவெளித்தோற்றம் (Hasłucination) அதனை இலக்கியங்களில்


58. சஞ்சயனுக்கு ஒரு திவ்விய சக்சு (Divine eye)

கொடுக்கப்பட்டிருந்ததென்றும் அதனால் அவன்
இப்பணியை நிறைவேற்றி வந்தான் என்றும் வியாச
பாரதத்தால் அறிகின்றோம். அவன் பட்ச பாதமாக
நடந்தபோது இந்தக் கண் மறைந்ததாகவும் குறிப்பிடப்
பட்டுள்ளது.

54. சஞ். பரு. சாரல்-அடி 45-49