பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

வேண்டிய சேதுவாகும். இந்த மாபெரும் பணியில் குரங்குகளெல்லாம் திரண்டு அமைத்த இராமர்-சேதுவில், அடியேனின் பங்கு ஒரு சிறு அணில் மேற்கொண்ட பங்கைப் போன்றது.

குரங்குகள் மலையைத் தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீர் அடைக்க லுற்ற
சலமிலா அணிலும் போலேன்²

என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமொழியால் கூறுவேன். இந்தத் திருப்பணியில் சிறியேனையும் தொடர்புபடுத்தியதற்கு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் குறிப்பாக அதன் இயக்குநர் டாக்டர் சிலம்பொலியாருக்கும் என் நன்றி என்றும் உரியது. இத்தகைய 'அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காகவே' என் நுகர்வினைக் (பிராரத்தக்) காலத்தை நீட்டித்துக் கொண்டிருக்கும் 'பைந்தமிழ்ப் பின் சென்ற பசுங்கொண்டலாம்? ஏழுமலையப்பனை மனம், மெய், மொழிகளால் வாழ்த்தி வணங்கி அமைகின்றேன். -

ஏத்திமத மெல்லாம்
எதையறிந்தேம் என்னும்? எதைச்
சாத்திரங்கள் நன்காய்ந்து,
சலிக்கும்? எதை-நாத்திகமோர்
சற்றுமே ஒர்ந்திலதாச்
சாதித் திடும்? அதையே
பற்றுவாய் நெஞ்சே!
பரிந்து³- வெ. ப. சுப்பிரமணிய முதலியார்


<வேங்கடம்'.
அண்ணாநகர்
சென்னை-600040
ந. சுப்புரெட்டியார்

24-5-1990


2. திருமாலை-21

3. அகலிகை வெண்பா-காப்பு


2. திருமாலை-21
3. அகலிகை வெண்பா-காப்பு