பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi



ஓர் இல்லத்தரசி அன்றாட உணவுக்குத் 'திடீர்ப் பயனாக” இருக்க வேண்டுமென்று அப்பளம், வடகம் தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவதுபோல் என் நூல்களும் கட்டுரைகளும் எனக்கு இப்பொழிவுகட்குத் துணையாக இருந்தன. என்றாலும் சேமிப்புப் பெட்டகங்களிலிருந்து வேண்டிய அளவு எடுத்து, அளவாக எடுக்கப்பெற்ற காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்கவும் சிறிது சிரமம் இருக்கு மல்லவா? அந்தச் சிரமம் எனக்கும் இருந்தது.

26-3-90 முதல் எழுதத் தொடங்கினேன். முதல் பொழிவின் எழுத்து வடிவம் 28-4-90இல் தயாராக இருந்தது. பொழிவு இரண்டைக்குறிப்புகளை வைத்துக்கொண்டு நிறைவேற்றினேன் . இதன் எழுத்துவடிவம் 26-4-90 தொடங்கப்பெற்று 23-5-96 அன்று நிறைவு பெற்றது. இப்படி என் பொழிவுகட்குப் பொருளறிவு தயாரிலிருந்தும் எழுத்து வடிவம் பெறுவதற்கு இரண்டு திங்கள்களாயின. இப்பொழுது பொழிவுகள் அச்சு வடிவம் பெறுகின்றன.

நாடு விடுதலை பெற்றபிறகு கல்வியுலகின் சிந்தனை, அறிவியல் கல்விக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது; அதுவும் தாய்மொழியில் கற்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது. ஆயினும் இளைஞர்களிடையேயும் பொது மக்களிடையேயும் "அறிவியல் பசி" இன்னும் சரியாக ஏற்படவில்லை. புனைகதைகளிலும் புதினங்களிலும் ஏற்பட்டுள்ள ஆர்வம்போல் இதில் இன்னும் ஏற்படாதிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

முன்னைக் கல்வி அமைச்சர் டாக்டர் செ. அரங்கநாயகம் தம் முயற்சிகளையெல்லாம் அறிவியல் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து "தாயினும் சாலப் பரிந்து" உதவினார். இன்றையக் கல்வி அமைச்சர் பேராசிரியர் டாக்டர் க. அன்பழகனும் இக்கல்விக்கு முழு மூச்சாக இன்னும் சற்று வேகத்துடன் உதவி வருகின்றார். இவர்களுடைய நோக்கத்தையும் இதயத்துடிப்பையும் நன்கு உணர்ந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒல்லும் வகையெல்லாம் இப்பணியை நிறைவேற்றி வருகின்றது. ஆங்கில மொழியிலுள்ள அறிவியல் கருத்துகள் தமிழில் வருவதற்கு எண்ணற்ற அறிஞர்கள் முயன்று கட்ட