பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தமிழில் அறிவியல்-அனறும் இன்றும்


மறைந்து கிடக்கும். சினம், அச்சம், அவமானம் போன்றவை அடக்கப் பெற்று நனவிலியுளத்திலிருக்கும்பொழுது மிக ஆற்றல் நிறைந்தனவாக இருக்கும். ஆகவே நனவிலியுளுத்தில் ஆயிரக்கணக்கான உணர்ச்சிகள் எந்த நேரமும் குமிழியிடடுக் கொண்டே இருக்கும். இந்த உணர்ச்சிகள் யாவும் ஒரே அளவு ஆற்றலுடன் இரா. சில ஆற்றல் மிக்கும்,சில ஆற்றல் குறைந்தும் இருக்கும். சில ஒரே வித நடத்தையைப் பற்றியனவாக இருப்பதால், அவை ஒரே வித இயைபுடையனவாக இருக்கும். இவ்வாறு. ஒரே வித இயைபுடையனவற்றுள் சிறியனவாக இருப்பவைமிகுந்த ஆற்றலுடன் அடக்கப் பெற்ற ஓர் அநுபவத்தைச் குழ்ந்து ஒரு விண்மீன் கூட்டம் போல் அமைந்து, அனைத்தும் சேர்ந்து செயலாற்றும். அடக்கப் பெற்ற இத்தகைய அநுபவ மண்டலம் நனவு உளம் அறியாத வண்ணம் மிகுந்த ஆற்றலுடன் செயலாற்றும் பொழுது அதை உளக்கோட்டம் (Complex) என்று குறிப்பர் உளவியலார். இந்திரப்பிரஸ்தத்தில் நீர் இல்லாத இடத்தை நீர் உள்ள இடம் என்றும், நீர் உள்ள இடத்தை நீர் இல்லாத இடம் என்றும் கொண்டு தொல்லைப்பட்ட துரியோதனனை ஏளனம் செய்த திரெளபதி பின்னர் துரியோதனனால் அரசவையில் துகிலுரியப்படும் அளவுக்குப் பழிவாங்கப் பெற்றாள் அன்றோ?

நனவிலியுளமே நமது முழு அநுபவமும் வீற்றிருக்கும் மூலபண்டாரமாகும். நாம் இல்வுலகில் பல்வேறு வெப்பநிலைகள், காற்று நிலைகள், பொழுது நிலைகள் முதலிய இயற்கைத் தோற்றங்களிடையே வாழ்ந்து வருங்கால் அந்தந்த நிலைக்கேற்ப நமது குருதியும், நுரையீரலும், கல்லீரலும் பிறவுறுப்புகளும் நம்மையும் அறியாது இயங்கிவருவது இந்த தனவிலியுளத்தின் ஏவற்படியேயாகும். தலைமுறை தலைமுறையாக எழுந்த அநுபவத்தின் பயனாக நம்மிடையே பதிந்து வந்த பழக்கவழக்கங்கள் இவ்வாறு இயக்க வடிவ எண்ணங்களாகவே நினைவிற்கு வந்த இயக்க வடிவமாகவே இயங்குகின்றன. இவற்றில் நனவு உளத்தையும் நனவிலியுளமே ஆண்டு வருகின்றது. ஒருசிறு சொல்லோ எண்ணமோ ஆற்றல் பொங்கி எழும் நடுவிட ஊற்றாக விளங்குகின்றது. நனவிலி உளத்தில் ஒருவரின் சொந்த அநுபவங்களோடு அவரது மூதாதையரின் அநுபவங்களும் அடைபட்டுள்ளவை என்று கூறுவர் ஃபிராய்ட் .