பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்தந்தை முனைவர்க இன்னாசிமுத்து, சேக துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம். அறக்கட்டளை நிறுவும் அன்பர்கள் தாம் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பல குறிக்கோள்களில் ஏதாவது ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென்ற கருத்துக்கு ஒரு நிரந்தர வடிவம் அமைத்து அது காலம் உள்ளவரையில் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதிய திட்டமே அறக்கட்டளையாகும். டாக்டர்.எஸ். சாமிமுத்து என்ற தமிழன்பர் எல்லாவித முன்னேற்றங் களுக்கும் அடிப்படையாகவுள்ள அறிவியல் உணர்வு மக்களிடம் ஏற்படவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்று கருதினார். தமிழில் அறிவியல் வளர்ச்சி எப்படி ஏற்பட வேண்டும் என்பதை ஆண்டுதோறும் மக்களுக்கு எடுத்துக்காட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 'டாக்டர் எஸ். சாமிமுத்து அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்” என்ற ஓர் அறக்கட்டள்ை நிறுவியுள்ளார். அந்த அறக்கட்டளை ஆதரவில் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் 1998-க்கு உரிய திட்டத்தில் 1 இயற்பியல் நோக்கில் (2) உயிரியல் நோக்கில் என்ற தலைப்புகளில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளே தமிழில் அறிவியல் செல்வம் என்ற இந்த நூல் வடிவம். பேராசிரியர் தம் வாழ்நாளில் நிகழ்த்திய 14 செர்ந்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று. இதனால் அறக்கட்டளை நிறுவியவர்களின் குறிக்கோள்