பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 87 (இ) கழிவுப் பொருள்கள் கழிவுப் பொருள்களைச் சேகரித்து அகற்றுதல் விண்வெளியில் தனிப்பட்ட பிரச்சினையாகும். விண்வெளிக் கலத்தில் விமானங்களில் இருப்பதுபோல் கழிவுப் பொருள்களைச் சேகரிக்கும் அமைப்பு ஒன்று உள்ளது. இந்த அமைப்பு சிறு நீரினை ஏதோ ஒரு வகையில் மாற்றிச் சேகரித்து உலரவைத்து, திடநிலையிலுள்ள கழிப்பு பொருளுடன் திரட்டி வைக்கின்றது. விண்வெளி வீரர்கள் கழுவின நீரையும் இம்முறையிலேயே மாற்றுகின்றது. சிறுநீரும் கழுவின நீரும் கழிவுத் தொட்டிக்கு மாற்றப் பெறுகின்றன. விண்வெளி வீரர்கள் விண்கலத்தின் வெளியே பணியாற்றும்போது அவருடைய விண்வெளி உடையிலேயே கழிவுப் பொருள்களைச் சேகரிக்கும் அமைப்பு உள்ளது. (ஈ) உறங்குவதற்கு வசதிகள் : விண்வெளிக் கலத்தின் அளவிற்கேற்ப உறங்குவதற்குரிய வசதிகள் மாறுபடுகின்றன. அப்போலோ போன்ற சிறிய விண்கலங்களில் இருக்கையிலிருந்த வண்ணம் உறங்க வேண்டியதுதான். அவர்கள் மிதக்காமலிருக்கும் பொருட்டுத் தம்மை இருக்கையிலேயே பிணைத்துக் கொள்ளுகின்றனர். பெரிய விண்கலங்களில் (Siயtleorbiter) உறங்குவதற்கெனத் தனிஇடம் உள்ளது. இவை உறங்குவதற்கேற்றவைகளாகும். இதில் புகுந்து கொண்டு பிணைக்க பெறாமல் நன்கு உறங்கலாம். (உ) உடற்பயிற்சி : நீண்டகால விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் விண்வெளிப் பயணிக்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதயம், குருதிக் குழல்கள், தசைகள் ஆகியவை எடையற்ற நிலையில் சோர்வுறும் காரணம், உடலுக்கு வேலையின்மை, புவியீர்ப்புச் சூழ்நிலையில் இவை இயங்குவதைப்போல் எடையற்ற சூழ்நிலையில் இயங்குவதில்லை. விண்வெளி ஆய்வகத் (Skula) திட்டத்தில் 34 நாட்கள் விண்வெளியில் இருக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் விண்வெளி வீரர்கள் நாடோறும் 30 மணித்துளிகள் காலம் உடற்பயிற்சி செய்வர். அவர்கள்