பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 தமிழில் அறிவியல் செல்வம் நிலையான மிதிவண்டியில் GertubuGeuữ. Tread millæů போன்ற அமைப்பு இது காலினால் மிதித்து இயக்கப் பெறவேண்டிய பொறியமைப்பு இது. (ஊ) பொழுதுபோக்கு : நீண்டகால விண்வெளிப் பயணங்களில் பொழுதுபோக்குச் செயல்களும் மிகவும் இன்றியமையாதவை. இவை மனவளத்தை உண்டாக்கும் நூல்கள், விளையாட்டுகள் பதிவு செய்யப் பெற்ற இசைப் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் இவை நெகிழ்வடைவதற் கேற்பப் பயன்படுத்தப் பெறும். (எ) உடை வசதிகள் : விண்வெளி வீரர்கள் விண்வெளி உடையை (Spacesuit) அணிந்து கொள்ள வேண்டும். இஃது இரு உறைகளாலான இரப்பர் சேர்ந்த நைலானாலானது. இந்த உடை விண்வெளி வீரரின் உடல் முழுவதையும் மூடிக்கொண்டிருக்கும். உடலின்மீது படியும் உடையில் ஏராளமான துளைகள் இருக்கும். இந்த உடைக்குள் இருக்கும்பொழுது அருகிலுள்ள குழல்வழியாக உயிரியம் உட்செலுத்தப்பெறுகின்றது. இதன் காரணமாக உடலைச்சுற்றித் தேவையான காற்றழுத்தம் அமைகின்றது. தவிர, வியர்வை துர்நாற்றம் இவை வெளியேற்றப் பெறுகின்றன. இவை தொப்பியிலிருந்து தொங்கும் குழல் வழியாக உயிரியத்தின் மூலம் வெளியேற்றப் பெறுகின்றது. இந்த உயிரியம் தூய்மை செய்யும் கருவியை அடைந்து அங்குக் கரித்துரளால் தூய்மையாகப் பெற்றுத் தேவையான ஈரப்பசையுடன் மீண்டும் உடையினை அடைகின்றது. இந்த விண்வெளியுடை விண்வெளிக் கலத்திலுள்ள பல்வேறு தேக்கங்களுடன் Tanks) பொருத்தப் பெற்றிருக்கும். ஒரு தேக்கம் போதுமான காற்றழுத்தத்தை நிலவச் செய்கின்றது. மற்றொன்று உயிரியத்தைத் தருகின்றது: பிறிதொன்று தீங்கு பயக்கக் கூடிய கரியமில வாயுவை உடலிலிருந்து நீக்குகின்றது. மேலும் உடைக்கு அனுப்பபெறும் உயிரியம் போதுமான வெப்ப