பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 தமிழில் அறிவியல் செல்வம் இக்காலத்தில் பாலியற் கல்வி (Sex Education) a usifiana, மேல்நிலை பள்ளிகளிலேயே புகுத்தப் பெற வேண்டும் என்று பேசப் பெறுகின்றது. இது போலவே ஒழுக்கம் சார்ந்த கல்வி (Moral Education)யையும் புகுத்தப் பெறல் வேண்டும் என்றும் பேசப் பெறுகின்றது. இந்த மட்டங்களில் இவற்றைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமேயன்றி தேர்வுக்குறிய பாடங்கள்போல் ஆழமாகக் கற்பிக்க வேண்டியலில்லை என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். நமது நிலை . ஆனால் இன்று நாம் பேசப் பெறும் பொருளை சற்றுவிரிவாக, விளக்கமாக, அழுத்தமாகவே தெரிந்து கொள்வதற்கேற்றவாறு காட்ட வேண்டும். அறக்கட்டளை வைத்தவரின் நோக்கமும் அதனைச் செயற்படுத்தும் துறையினர் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதை நீள நினைத்தல் வேண்டும். 1. ஆணுறுப்புகள் திருமணம் புரிந்து கொள்ள போகும் ஒவ்வொரு நம்பியும் நங்கையும் ஆண் - பெண் பிறப்புறுப்புகளின் அமைப்பினையும், அவை செயற்படும் முறையின்ையும், இனப்பெருக்கத்தின் இயல்பினையும் சரியாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். எல்லா உறுப்புகளிலும் சிறந்தது பாலுறுப்பு Se.organ) ஆகும் என்பது உயிரியல் உண்மையாகும். எல்லா உறுப்புகட்கு அஃது உயிர் போன்றதாதலின் அதனைப் பண்டையோர் உயிர்நிலை என்று பெயர்சூட்டி அதன் நுட்பத்தைப் புலப்படுத்தினர். இந்த உயிர்நிலையின் நுட்பங்களைச் செவ்வனே ஆய்ந்து, அதன் ல்புகளை எவரும் உணரும்முறையில் அறிவுறுத்தியுள்ளனர். உயிரியல் அறிஞர்கள். ஆறறிவு படைத்த மனித இனம் இதனைத் தெய்வப் பணிக்கெனப் பயன்படுத்த வேண்டும். மாறாக இச்செயலை காமக்களிப்பாக காதல் விளையாட்டாக, பயன்படுத்துகின்றனர். துறவி வேடம் பூண்டும் இவ்விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். போலித் துறவிகளைக் குறிப்பிடும் வள்ளுவப் பெருந்தகை, . . .