பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழில் அறிவியல் செல்வம் அளவுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். இடப்புற விரை வலப்புற விரையை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும்; சற்று அதிகக் கீழாகவும் தொங்கும். ஒவ்வொரு விரையும் எண்ணற்ற மிகமிகச் சிறிய தொடக்க நிலை காணப் பெறாத சிறுகுழல்களலானது. இந்தக் குழல்களில்தான் விந்தணுக்கள் உண்டாகின்றன். வலைப்பின்னல் போல் அமைந்து சுருண்டு கிடக்கும் குழல்களை இரண்டு விரைகளின்றும் எடுத்து அளந்தால் அவை 5200 அடிக்கு மேல் நீளம் உள்ளனவாம்! கிட்டத்தட்ட ஒரு மைல் நீளம். (அ) வித்தனுக்கள் : கீழ்நிலைப் பிராணிகளிடம் வித்தணுக்கள் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் ஆண்டில் ஒரு சில மாதங்களே - உற்பத்தியாகின்றன. ஏனைய மாதங்களில் இனப்பெருக்கத்தைப் பொறுத்தமட்டிலும் விரைகள் செயற்படுவதில்லை. எனினும் பெரும்பாலான உயிரினப் பிராணிகளிடம் ஆண்டு முழுவதிலும் விந்தணுக்கள் உற்பத்தியாகிக் கொண்டே உன்னன. மனிதன் இந்த இனத்தைச் சேர்ந்தவனாதலின், அவனிடமும் சதா இந்த உயிரணுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால்தான் மனிதன் கலவியை ஒருகலையாக வளர்த்து விட்டானோ என்று கருதவேண்டியுள்ளது. 彎 (ஆ) ஹார்மோன்கள் : விரைகள், விந்த்ணுக்களை உண்டாக்குவதுடன் வேறு ஒரு தனித்தன்மையுள்ள ‘ஹார்மோன் (Hormone) என்ற சுரப்பு நீரையும் உண்டாக்குகின்றது. இது வித்தணுவினின்றும் வேறுபட்டது. இந்த நீர் குருதியுடன் நேராகக் கலக்கின்றது. இவ்வாறு கலப்பதனால் மனிதனிடம் அது குறிப்பிடத்தக்க உடல் உள iயல்புகளை விளைவிக்கின்றது. விந்தணுக்களும் ஹார்மோன்களும் விரைகளில் உண்டானபோதிலும் அவை அவற்றின் வெவ்வேறு பகுதிகளில் உண்ட்ாகின்றன். இரண்டு. ருள்களும் தன்மையிலும் செயலிலும் முற்றிலும் 1ழங்கப்பெறும்.