பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 தமிழில் அறிவியல் செல்வம் வைக்கப் பெற்றுள்ள வெப்பநிலையைப் பொறுத்தது. சாதாரண அறையின் வெப்ப நிலையில் அவை 48 மணி நேரமும், அதற்கு மேலும் உயிர் வாழலாம். வெதுவெதுப்பான வெப்பநிலையில் அவற்றின் இயக்கம் விரைவாக்கப் பெற்று அவை தம் ஆற்றலை இழப்பதால் அவற்றின் ஆயுளும் குறுகி விடுகின்றது. எனினும் சீதள அலமாரியில் அவை பல நாட்கள் உயிரோடிருக்கும். குளிர்ந்த நிலை அவற்றின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிடும்; மீண்டும் அவை வெப்பநிலைக்கு வருங்கால் இயக்கத்தைத் தொடங்கும். திடீரென்று உறைநிலைக்குக் கொண்டு வந்தால் அவற்றை மாதக்கணக்கில் ஏன்? ஆண்டுக்கணக்கில் கூட இயக்கநிலையில் வைத்திருக்கக் கூடும். செயற்கை முறை விந்துப் பாய்ச்சலால் உயிரினக் கால்நடைகளைப் பெருக்குவோர் காளையின் விந்துவை இவ்வாறு பாதுகாத்து பசுக்களைக் கருவுறச் செய்கின்றனர் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. விந்தணுக்கள் எப்பொழுதும் தாமாக இயங்கிக் கொண்டு தமக்குச் சாதகமான இடத்தை நோக்கியே அசைந்து செல்லும் தன்மையைப் பெற்றிருப்பது வியப்பினும் வியப்பாகும். விந்துப் பாய்மத்திலும், யோனிக் குழலிலும், கருப்பையைலுமுள்ள சிளி போன்ற அவை நகர்வதைக் கவனித்தால் அவை கருப்பையை நோக்கியே நகர்வது புலனாகும். யோனிக் குழலிலும் கருப்பையிலுமுள்ள திரவத்தை நுண்பெருக்கியின் மூலம் சோதித்தால் இவ்வுண்மை தெளிவாகப் புலனாகும். . (ஊ) பிரம்மச்சரியம் : ஒருவர் వాతావ ஈடுபடாமலேயே விந்துவைக் காப்பற்றினால் வியத்தகு பலனை எதிர் பார்க்கலாம் என்று நம் முன்னோர்கள் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பிரம்மச்சரியம் (மாணி நிலை) காத்தல்' என்பது நம்நாட்டு அறிஞர்கள் கண்ட முறை புத்தர் சங்கரர் போன்ற ஞானச்செல்வர்கள் இம்முறைக்கு எடுத்துக்காட்டு கள்ாவார்கள். பிரம்மச்சரியம் காத்த காங்கேயன் - வீட்டுமன்