பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழில் அறிவியல் செல்வம் (iii) விந்தேறு குழல் இது தடித்த சுவரைக் கொண்ட சிறிய துவாரத்தையுடைய நரம்பு போன்ற ஒரு குழலாகும். இதனுள் நுழையும் வித்தனுக்கள் அடிவயிற்றிற்கும் தொடைக்கும் இடையிலுள்ள இடத்தின் வழியாகச் சென்று சிறுநீர்ப்பையின் கழுத்தின் பின்புறத்திற்குக் கொண்டு செலுத்தப் பெறுகின்றன. இங்கு விந்தேறு குழல் விந்துப் பைகளுடன் சேர்ந்து வெளியேற்றும் தும்புபாக (Duct) அமைகின்றது. இது புராஸ்டேட் (Prostate) சுரப்பியைத் துளைத்துக் கொண்டு செல்வதற்கு முன்பு அஃது ஒரு பையாக விரிகின்றது. இதில் விந்தின் ஒருபகுதி தேக்கத்தில் தங்குவதுபோல் நிறுத்தி வைக்கப் பெறுகின்றது. இக்குழலின் நீளம் கிட்டத்தட்ட 6 அங்குலம்; குறுக்களவு கிட்டத்தட்ட க் அங்குலம்’வித்தேறு குழல் சற்றுத் தடித்திருத்தலின் அது விரைப்பையிலிருந்து தொடைகளுக்கு கிடையில் செல்வதை விரல்களால் தொட்டு உணரலாம். எனவே, இந்த மிக நீண்டவழியாக விந்தனுக்கள் பயணம் செய்து வெளிவரவேண்டும் என்பதை அறியவேண்டும். இந்த நீண்ட வழியில் எபிடிடைமிஸிலோ விந்தேறு குழலிலோ யாதேனும் தடை ஏற்பட்டு குழல் அடைத்துக் கொள்ளுமாகில் விந்தனுக்கள் அந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் வெளிவர முடியா இரண்டு குழல்களிலும் உள்ள விந்தேறு குழல்களில் இத்தடை ஏற்படின் ஆண் மலடாகி விடுவான். சாதாரணமாகத் தீங்கினாலும் அல்லது நோயினாலும் இத்தடை நிகழ்கின்றது. வெள்ளை நோயின் காரணமாக அடிக்கடி இக்குழல்களில் வீக்கம் ஏற்பட்டுக் குழலின் துவாரமே அடைத்துக் கொள்ள நேரிடும். இந்த நிலையிலும் புணர்ச்சியின்போது விந்து வெளிப்படுகின்றது. இது s புராஸ்டேட் சுரப்பியிலும் விந்துப்பைகளினின்றும் வெளிவருகின்றது. இந்த இரண்டு உறுப்புகளும் விந்தேறு குழல்களில் ஏற்படும் அடைப்பினால் பாதிக்கப் பெறுவதில்லை. - .