பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 தமிழில் அறிவியல் செல்வம் பெறுகின்றது. இச்சுரப்பு நீரின் பயன் இன்னும் தெளிவாக அறியப் பெறவில்லை. விரையினின்று வெளிப்பட்டவுடன் விரைவாக அசைந்து செல்லும் ஆற்றலைப் பெறாத விந்தனுக்கள் இந்த நீருடன் சேர்ந்த பிறகே அந்த ஆற்றலை அடைகின்றன. வெளிப்புறம் பசை போன்ற விந்து சற்று நீர்போலாவதற்கும் இந்த நீர் துணைபுரிவதுடன் விந்துப் பாய்மத்திற்கு (Seminal fluid)ப் பிரத்தியேகமான ஒரு மனத்தையும் நல்குகின்றது. இந்நீர் காரத்தன்மை (Alkalie உடையது. வித்துப்பாய்மம்: இக் கூறியவற்றால் புணர்ச்சியில் வெளிப்படும் விந்துப் பாய்மம் பல சுரப்பிகளினின்றும் வெளிப்படும் சுரப்பு நீர்களின் தொகுதியாகும். இந்த சுரப்பு நீர்த் தொகுதியில்தான் விந்தணுக்கள் கலந்து வெளிப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படுங்கால் சிறுநீர்ப் புறவழியின் குமிழின் அருகிலுள்ள கெளமர் கரப்பியின் செயல்முறையும் அதிகரிக்கின்றது. அந்த நிலையிலிருந்து நடைபெறும் செயல்கள் யாவும் முயற்சியின்றியே நடைபெறுகின்றன. சுரப்பிகளும் விந்துத் தும்புகளும் சுருங்கிப் பாய்மங்களைப் புர்ாஸ்டேட் சிறு நீர்ப்புறவழியை நோக்கித் தள்ளுகின்றன. உடனே சிறு நீர்ப்புறவழியும் தொடர்ந்தாற்போல் தாள இயக்கம் போன்ற சுருக்கங்களால் வித்துவை வெளிப்படுத்துகின்றது. இச்செயல் பறுங்கால் சிறு நீ பயின் அடிப்புறத்திலுள்ள்