பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 115 ஒரு முக்கிய செய்தி : ஒரு முக்கிய செய்தியையும் ஈண்டு அறிந்து கொள்ளுதல் அவசியம். புராஸ்டேட் சுரப்பிக்கு நேரிடும் கோளாறுகள் சிறுநீரடைப்பிலும் கொண்டு செலுத்துகின்றன. சிறுநீர்ப்பையின் அடிப்பகுதியில், அதன் வாயருகில், இவ்வுறுப்பு அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும். வெள்ளை நோய்த் தொற்றினைச் சரியான காலத்தில் சிகிச்சை செய்யாமல் விட்டு விட்டால் சிறுநீர்ப் புறவழியின் கீழ்ப்பகுதியைப் பாதித்திருக்கும் நோய் மேனோக்கிச் சென்று புராஸ்டேன் சுரப்பியையும் தாக்குகின்றது. வேறு காரணங்களாலும் இந்தச் சுரப்பி நோயுறுகின்றது. சில சமயம் சிலருக்கு நடுவயதில் கிட்டத்தட்ட 50 வயதில் இச்சுரப்பி பெரிதாக வளர்ந்து நீரடைப்பினை விளைவித்தல் கூடும். இந்நிலை முற்றினால் இச்சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியும் நேரிடலாம். புராஸ்டேட் கோளாறு உள்ளவர்களிடம் விந்தனுக்கள் தம் ஊட்டத்தை இழக்கும். ஆனால் அஃது அவரிடம் இனப்பெருக்க ஆற்றலைக் குறைக்காது. புராஸ்டேட் சுரப்பியை அகற்றி விட்டால் விந்துப்பாய்மம் வெளிப்படாது. ஆனால் அவரிடம் கலவி புரியும் திறன் இருந்து கொண்டுதான் இருக்கும். விந்து வெளிப்படாததன் காரணமாக அந்த ஆண் மலட்டுத் தன்மையை அடைகின்றார். பெரும்பாலும் கிழப்பருவத்தினருகே இந்த அறுவை சிகிச்சை செய்யப் பெறுவதால் இனப்பெருக்கம் பற்றிய பிரச்சினையே இங்கு எழ இடமில்லை. (wi) இலிங்கம் புண்ர்ச்சி நடைபெறும்பொழுது வெளிப்படும் விந்துவைப் பெண்ணின் பிறப்புறுப்புகளில் பாய்ச்சுவதற்குத் துணையாக இருப்பது இலிங்கமாகும்(Pers) இதுவே ஆணையும் பெண்ணையும் இணைவிழைச்சின்பொழுது இணைக்கும் இணையுறுப்பு (Copula) ஆகும். இதனை அடிப்பகுதி, நடுப்பகுதி, துனப்பகுத எனறு மூன்று பகுதிகள்ாகப் பிரித்து நோக்கலாம். நடுபபகுதி தி.9.