பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†16 தமிழில் அறிவியல் செல்வம் நீளமாகவும் மெல்லியதாகவும் உள்ளது. அடிப்பகுதி மிக ஆழமாக அடிவயிற்றில் புதைந்துள்ளது. இப்பகுதி இடுப்பெலும்புக் குழியில் அமைந்துள்ளது. இங்குதான் சிறுநீர்ப் புறவழிக் குமிழும் (Urethra bull) கெளபர் சுரப்பியும் உள்ளன. துனிப்பகுதி உறுதியான முகட்டைக் கொண்டுள்ளது. அஃது இலிங்கம் அல்லது மணி (Gians) என வழங்கப்பெறும். அதன் நுனியில்தான் சிறுநீர்ப் புறவழியின் திறப்பு உள்ளது. இந்த இலிங்கம் முழுதும் மிக நெகிழ்வான மெல்லிய, நீளுந்தன்மையுள்ள தோலினால் போர்த்தப் பெற்றுள்ளது. இத்தோல் இலிங்கத்தின் முகட்டை இரட்டைமடிப்பாக மூடிக் கொண்டுள்ளது. அதற்கு மேலும் நீட்டிக் கொண்டிருக்கும் தோல் நுனித்தோல் அல்லது முன்தோல் (Prepuce) என்று வழங்கப்பெறும் இது மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலரிடம் இது மணியை முழுதும் மூடிக் கொண்டிருக்கும்; சிலரிடம் இது முழுவதும் மூடிக் கொண்டிருப்பதில்லை சிலரிடம் சிறிதும் மூடாமலும் இருக்கும். இதன் நுனியில் ஏராளம்ான நரம்பு முடிவுகள் உள்ளன. ஆகவே இப்பகுதி மிகவும் உணர்வுடையது. எனினும், இதனையும் இலிங்கத்தின் முகட்டையும் இணைக்கும் மடிப்புத் தோல் இன்னும் அதிகமான தொடு உணர்ச்சியைக் கொண்டது. (அ) கன்னத்து : அதிகமான நீட்டிக் கொண்டிருக்கும் முன்தோலின் ஒருபகுதியை அறுத்து நீக்குவதே சுன்னத்து Circபாcision என்று வழங்கப் பெறுகின்றது. யூதர்களிடமும் இஸ்லாமியர்களிடமும் இப்பழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. முன் தோலுக்கும் மணிக்கும் இடையிலுள்ள இடத்தில் துாதாற்றமுள்ள அழுக்கும் சுரப்பு நீர்களும் எளிதாகக் கீழே தள்ளுவதற்கும் இச்சடங்கு செய்யப் இலிங்கம் முழுவதிலும், குறிப்பாக அதன் முகட்டில், எண்ணற்ற நரம்பு முடிவுகள் உள்ளன. ஆகவே, இலிங்கம்