பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 தமிழில் அறிவியல் செல்வம் 2. பெண் உறுப்புகள் ஆணிடம் பெரும்பாலும் பாலுறுப்புகள் (Sex Organs) அவனுடைய உடலின் புறத்தே அமைந்துள்ளன. பெண்ணுறுப்புகள் யாவும் அவள் உடலின் உட்புறத்தே அமைந்துள்ளன. இதுவே இரண்டு அமைப்புகளுக்கும் உள்ள வேற்றுமை இவ்வேற்றுமையே ஆணிடம் காமத்துடிப்பை விரைவாக எழுப்புவதற்கும் பெண்ணிடம் அஃது அடக்கத்துடன் இருப்பதற்கும் காரணமாக இருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. இனப்பெருக்கத்தில் ஆணின் பங்கு இணை விழைச்சுடன் முற்றுப் பெறுகின்றது; பெண்ணின் பங்கு அஃதுடன் முற்றுப்பெறுவதில்லை. பத்து. மாதம் குழந்தையைக் கருப்பையில் தாங்கிக் கருவுயிர்த்து, பாலூட்டிவளர்க்கும் வரையில் பெண்ணின் பங்கு ஒர் இதிகாசம் போல் வளர்கின்றது. ஆகவே பெண்ணின் பங்கு மிகப் பெரியது. கடவுட்டன்மை வாய்ந்தது. நடைமுறையில் குடும்பத்தின் பொறுப்பு அவளிடம் தானே உள்ளது? அதனால்தானே இல்லாள் - இல்லத்தை ஆள்பவள் - என்று திருப்பெயரும் பிறந்தது. ... " பெண்ணின் உறுப்புகள் ; பெண்ணிடம் உள்ளடங்கிய பிறப்புறுப்புகள் () யோனிக்குழல், (i) கருப்பை, (ii) கருக்குழல் (ப) சூற்பைகள் என நான்கு பகுதிகளாக அமைகின்றன. இவை யாவும் ஒன்று சேர்ந்த நிலையில் யோனி (Willia) என்ற பெயரால் வழங்கப் பெறுகின்றது. இத்தொகுதியில் யோனிக் குழல் வாயில் இருப்பவை (அ) மான்ஸ்வெனரிஸ் (ஆ) வெளியுதடுகள், (இ) உள் உதடுகள், (ஈ) யோனிலிங்கம், (உ) கன்னிச்சவ்வு ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றை வெளிப்பறப் பிறப்புறுப்புகள் என வழங்கலாம். இவை உட்புறப் பிறப்புறுப்புகட்குப் பாதுகாப்பாக அமைவதுடன் காதல் உணர்ச்சிகட்கு (Brotic sensations) முக்கிய இடங்களுமாகின்றன. ஆகவே பெண்ணின் யோனித் தோற்றங்கள் (vularfeatures) தனிப்பட்ட விரிந்த வீச்சினைக் கொண்டுள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக விளக்குவோம். - .