பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 119 (அ) மான்ஸ் வெனரிஸ் (Mons veners) : இப்பகுதி இடுப்பெலும்புக் கட்டுக்குமேல் கொப்பூழுக்குக் கீழ் யோனிக்குழல் வாயிலுக்கு மேல் இருக்கும் பகுதி. இது. ஆனும் பெண்ணும் கலவி புரியுங்கால் அவர்களின் இடுப்பெலும்புகள் ஒன்றோடென்று மோதாதிருப்பதற்கு மெத்தை போன்ற இப்பகுதி துணை செய்கின்றது என்பதற்காகக் கூறுவர் கிராஃப் (Graaf என்ற உடற்கூற்றியல் அறிஞர். இப்பகுதி குட்டையான பண்படாத உரோமங்களால் மூடப்பெற்றுள்ளது. இந்த உரோமத்திற்கும் இனப்பெருக்க உறுப்புகட்கும் நெருங்கிய உறவு உண்டு. இருபாலாரிடமும் காணப்பெறும் இடைநிலைப் பாலறிகுறிகளில் இந்த உரோமமும் ஒன்று. இஃது இருபாலாரும் பருவம் அடையத் தொடங்குவதற்குரிய முதல் அறிகுறிகளுள் ஒன்றாகும். பெண்ணிடம் உரோமப் பகுதியின் மேல் விளிம்பு மான்ஸ் வெனரிஸ்ஸுக்கு மேல் ஒருபடுக்கைக் கோடுபோல் அமைந்து கீழ்நோக்கினு உச்சியைக் கொண்ட ஒரு முக்கோணம்போல் அமைந்துள்ளது. இந்நிலை ஒரு பாம்பின் படம்போல் இருப்பதால் கவிஞர்கள் அதனைப் பட அரஅல்குல்' என்று குறிப்பிட்டனர் போலும். (ஆ) வெளியுதடுகள் : இவற்றைப் பெரிய உதடுகள் (Labia ாlora) என்றும் வழங்குவர். இவை இரண்டு நீளமான மெத்தைகள் அல்லது மடிப்புகள் போன்று அமைந்து பிறவெளிப்புறப் பிறப்புறுப்புகளைச் சுற்றி வளைத்துக் கொண்டுள்ளன. இவையும் உரோமங்களால் மூடப்பெற்று, யோனியின் உள்ளே அமைந்திருக்கும் மிகநுட்பமான பகுதிகளைப் பாதுகாக்க உதவுகின்றன. இளம் பெண்களிடம் - பிள்ளைப்பேறு ஏற்படி மிகச்சிறிய உதடுகளைக் கொண்ட பெண்களிடம் வெளிப்புற உதடுகள் நடுப்பகுதியில் சந்தித்து ஏனைய அமைப்புகளை யெல்லாம் மறைத்துக் கொண்டிருக்கும். இந்த உதடுகளை விலக்கிப் பிடித்துக் கொண்டாலன்றி உள் அமைப்புகள் கண்ணுக்குப் புலனாகா. பெண் கருவுற்ற நிலையிலும் கருவுயிர்க்கும்பொழுதும் வயதான பெண்களிடமும் வெளியுதடுகளின் மட்ட