பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 124 (ஈ) யோனிலிங்கம் : யோனியின் மேற்புறம் இரண்டு உள்.உதடுகளும் சந்திக்கும கோணம் போன்றுள்ள இடத்தில் யோனி லிங்கம் (Clitoris) அமைந்துள்ளது. இது யோனித்துவ்ாரத்திற்கு (தலைவாயிலுக்கு மேல் கிட்டத்தட்ட ஒர் அங்குல உயரத்தில் அமைந்துள்ளது. இது மிகச்சிறியதாக இருப்பினும் புணர்ச்சி யதுபவத்திற்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். யேனிலிங்கம் கிட்டத்தட்ட இலிங்கத்தை ஒத்துள்ளது. ஆனால் இலிங்க முகப்பைவிட அளவில் மிகச் சிறியது; அதில் உள்ளது போன்ற சிறுநீர்ப் புறவழி (urethra) இதில் இல்லை. இது கால் அங்குல நீளம் உள்ளது. பொதுவாக இதன் துணி பட்டாணியைப் போன்று உருண்டிருக்கும். பெரும்பாலும் இது விறைக்கும் தன்மையுள்ள இழையத்தாலானது. இந்த இழையத்தில் அதிகமாகப் பரவியுள்ள நரம்புகள் தொடுபுலனுக்கும் சாதல் சம்பந்தமான துண்டுதலுக்கும் மிகவும் உணர்வுடையவை. யோனிலிங்கம் ஒரு பாலுறுப்பு என்ற முக்கியத்துவத்தைச் சென்ற நூற்றாண்டியில் தான் அறிந்தனர். (உ) கன்னிச் சவ்வு (Humen) : இந்த அமைப்பு யோனிக்குழலின் நுழைவாயிலில் உள்ளது. முதல் இணைவிழைச்சின்பொழுது இது கிழிந்து விடுகின்றது: சிலசமயம் ஒரு சிலரிடம் இது கிட்டத்தட்ட 2/3 அங்குல கனத்திலும் இருக்கும். இத்தகைய அமைப்புள்ளவர்கள் முதல் இணைவிழைச்சுக்கு முன்னரே அறுவை சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும். கன்னிப் பெண்ணிடம் இந்த வாயில் அரைகுறையாக மூடப்பெற்றிருக்கும் கன்னிச்சவ்வின் வடிவத்தில் பல்வேறு மாறுபாடுகள் காணப்பெறுகின்றன. சிலசமயம் இது யோனி வாயிலை முற்றிலும் ஒரு விதானம் போல் (Diaphram) சூழ்ந்திருக்கும். ஆனால் அதன் நடுவில் ஏதோ ஒரிடத்தில் ஒரு சிறிய தொளை (Aperture) இருக்கும். சாதாரணமாக, இத்தொளையில் ஒரு விரல் நுனி நுழையக் கூடும். சிலரிடம் இஃது ஒரு குண்டுசி முனையளவு சிறிதாகவும் இருக்கலாம்; அல்லது அது உடைபடுவதற்குமுன்னர் .