பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 131 நன்றாகக் கிழித்துவிட வேண்டும். பின்னர் நடைபெறப் போகும் முதலிரவு நிகழ்ச்சியில் ஆண்குறி தாராளமாக நுழைவதற்கு வழி அமைப்பதும் இச் செயலாகும். (ஈ) கருப்பையின் நுழைவாயில் அடைத்து கிடப்பது: இதில் குருதி கருப்பையில் தேங்கிவிடும். தக்க அறுவைச் சிகிச்சையைக் கையாண்டு இத்தடைகளை நீக்கவேண்டும். பூப்பெய்தும் பருவம் நெருங்கும்பொழுது பெண் மருத்துவச் சோதனைக்குட்படுத்தப்பெற்று ஏதாவது தடையுள்ளதா எனச் சோதித்து அறிந்து, தடையிருப்பின் அதனை உரிய முறையில் களைதல் அறிவுடைமையாகும். ( மாதவிடாய் : இது பெண் பிறவியின் ஒரு முக்கிய கூறு. பெண் பூப்பெய்துங்கால் தொடங்கும். இது ஐம்பது வயது வரை தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்று வருவது. இதனால் இது மாதவிடாய்' என்று வழங்கப் பெறுகின்றது. சாதாரணமாக இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் நிகழ்வது இயல்பு. ஆனால், குறைந்த எண்ணிக்கையுடைய பெண்களிடமே இந்த ஒழுங்கு முறை காணப்பெறுகின்றது. பெரும்பாலோரிட்ம் இரு பத்தைந்திலிருந்து முப்பத்தைந்து நாள் வரை மாறுபட்டே இது நிகழ்கின்றது. ஆனால் ஒவ்வொருவருக்கும் இந்த முறை (மாதவிடாய் வட்டம்) நாட்கள் ஒரே சீராக இருத்தல் வேண்டும். அப்படியின்றி முன்னும் பின்னுமாக மாதவிடாய் ஏற்பட்டால், அஃது ஏதோ ஒரு கோளாறு என்று உணர்ந்து கொள்ள வேண்டும். சூற்பைகளில் ஊறும் சில ஹார்மோன்களும், அடித்தலைச் சுரப்பியல் (Pituitar gland) சுரக்கும் சில ஹர்ர்மோன்களுமே மாதவிடாய் ஒழுங்கு முறை தவறாது ஏற்படக் காரணமாகின்றன. அடித்தலைச் சுரப்பிமட்டிலும் பதினாறு வகை ஹார்மோன்கள் உண்டாக்குகின்றது என்று ಸಿತ*** உடலியல்பு பற்றிய கூறுகளும்