பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக்கிளர்ச்சி பற்றிய கூறுகளும் மாதவிடாய் வட்டத்தின் ஒழுங்கு முறையைப் பாதிக்கின்றன. மாதவிடாயின்பொழுது வெளிப்படும் குருதிக் கசிவு மூன்று நாட்களுக்காவது இருந்து கொண்டே இருக்கும். சில பெண்களுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் வரை நீடிப்பதுண்டு. ஒருமுறை வெளிவந்த குருதிக் கசிவு பத்துப் பதினைந்து நாட்கள் வெளிப்பட்ட வண்ணமிருந்தால் தக்க மருத்துவரை நாடிச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாயின்பொழுது வெளிப்படும் குருதி முதல் நாளும் கடைசி நாளும் வெளுத்த சிவப்பாயும், இடைநாட்களில் நல்ல சிவப்பாயும் இருக்கும். இவ்வாறு வெளிப்படும் குருதி உறைந்து கட்டிக் குருதியாவதில்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. இஃது இயற்கையின் நியதி, பல்வேறு தொல்லை தரும் விளைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு இறைவனது ஏற்பாடு மாதவிடாய்க் குருதி வெறுக்கத்தக்க துர்நாற்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதவிடாயின்பொழுதும் ஒரு பெண் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து எட்டு அவுன்சு வரை குருதியை இழக்கின்றாள். இதற்கு மேலும் குருதி வெளியேறினால் பெண்ணுக்குக் குருதிச் சோகை ஏற்படும். ஆகவே, தக்க சிகிச்சை மூலம் குருதியொழுக்கினைக் கட்டுப்படுத்துதல் மிகவும் இன்றியமையாதது. அறிவியலடிப்படையில் : மாதவிடாய் ஏற்படுவதை அறிவியலடிப்படையில் விளக்குவேன். ஒரு பெண்சூல் கொள்ளாத பொழுது அவள் மாதந்தோறும் எண்டோமெட்ரியத்தைக் (கருப்பையின் மேல்மட்டப் பகுதி) கழித்து நீக்குவதே மாதவிடாய் என்பது கருப்பையின் உட்புறம் போர்த்துக்கொண்டிருக்கும் மெல்லிய சளிச்சவ்வே ாண்டோமெட்ரியம் Biome என்று வழங்கப் பெறுகின்றது. குற்டையைலிருந்து முட்டையணு ஒன்று குற்பைத் திோவின் மீது ஊர்ந்து வந்து முதிர்ச்சியடைந்து பக்குவமடையத் தொடங்கும் பொழுது - அதாவது