பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 137 கருவுயிர்த்தல் : இது சில பெண்களுக்குச் சிரமமாக முடிகின்றது. கருப்பை, பிரசவப்பகுதி, குழந்தை இவை மூன்றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டால் பிரசவம் மிகச்சிரமமாக முடிகின்றது. முதலில் சுகப்பிரசவத்தை விளக்குவேன். ககப் பிரசவம் : பிரசவ வேதனையின்றிப் பிறத்தல் சுகப்பிரசவம் எனப்படும். இதுவே இயல்பான பிரசவம் ஆகும். இயல்பாக நடைபெறும் ஒரு நியதிக்கு மக்கள் சிரமப்பட வேண்டியதில்லை. உண்மையில் பழங்கால மக்களும் இன்று உழவர் இனத்தைச் சேர்ந்த பெண்களும் பிரசவத்தைச் சிரமம் என்று கருதுவதில்லை, உறையிலிருந்து கத்தியை உருவுவது போன்று குழந்தை எளிதாக அவர்கட்குப் பிறக்கின்றது இவர்கள் பிரசவம் ஆன மறுநாளே வேலைக்கும் போகின்றனர். நெல்லை மாவட்டத்தில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் துணைவியார் நல்ல உழைப்பாளி, இஸ்லாம் சம்யத்தினர் நல்ல உடற்கட்டையுடையவர். ஒருநாள் ஒர் உறைகிணற்றில் கிணற்றின் இருபுறங்களிலும் கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நீர் இறைத்துக் கொண்டீக்கும்பொழுது கால் சறுக்கியதால் கிணற்றில் விழுந்து விட்டார்; கிணற்றில் மார்வு அளவு நீர் இருந்தது. அம்மையார் கிணற்றில் விழுதவுடன் பிரசவம் நடந்து விட்டது தாய் குழந்தையைப் பாதுகாப்புடன் கையில் ஏற்திக் கொண்டு விட்டார். அண்மையிலிருந்தோர் தாயையும் சேயையும் கிணற்றிலிருந்து அகற்றினர். தாயும் சேயும் நன்னிலையிலிருந்தனர் (1961). நான் இல்லற நெறி என்ற நூலை எழுதிக் கொண்டிருந்த காலம். பழங்காலத்துப் பெண்களிடமும் இன்றைய உழவர் இனத்துப் பெண்களிடமும் எளிதாகப் பிரசவம் நடைபெறுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. இப் பெண்களின் திறந்த உடலில் கதிரவன் ஒளி நன்கு படுகின்றது: உண்ணும் உணவில் இன்றியமையாத வைட்டமின்கள்