பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 தமிழில் அறிவியல் செல்வம் உள்ளன. அவர்களுடைய எலும்புக் கூடும் இடுப்பெலும்புக் கட்டும் நன்கு வளர்ந்திருக்கின்றன. அன்றியும் அவர்களுடைய கடினமான உழைப்பும் அவர்களுடைய குழந்தையின் அளவைச் சிறியதாக்குகின்றது; இதனால் பிரசவம் எளிதாகின்றது. அவர்களுடைய திருமணமும் பெரும்பாலும் உறவினர்களுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. இதனால் உயரம், எடை தோற்றம் ஆகிய கூறுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வேற்றுமை இருப்பதில்லை. மேலும் பழங்காலத்தில் பெண்கள் தங்கள் உடலழகைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாது நல்ல உணவு உண்டனர்; காற்றோட்டமான வீடுகளில் வசித்தனர். சோம்பலின்றி வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து உடலை நன்னிலையில் வைத்துக் கொண்டிருந்தனர்.திருமணமும் தக்க பருவத்தில் நடைபெற்றதால் குழந்தை பிறக்க உகந்த பருவத்திலேயே தாய்மையை அடைந்து சுகப் பிரசவத்திற்கு உள்ளாயினர். பலவகைப் பிரசவங்கள் : தொண்ணுாற்றாறு சதவிகிதப் $osaiseñco gana a gui Headpresentation) நிகழ்கின்றது. கருப்பையில் குழந்தை சாதாரணமாகத் தலை கீழாகத்தான் இருக்கும் கால்களும் கைகளும் வளைந்தோ மடிந்தோ இருக்கும். தலை கீழ்நிலையில் இருப்பதால் அதுவே பிறப்பின் பொழுது முதலில் வருவது இயல்பாகும். தலை வாட்டம்ாகவும் உறுதியாகவும் இருப்பதால், அது கருப்பையின் வாயிலை விரியச் செய்யவும் துணைசெய்கின்றது. இதனால் குழந்தையின் பனிக்குட நீர் குழந்தையினி மூக்கில் ஏறாத நிலை ஏற்படுவதால் குழந்தைக்கு யாதொரு ஆபத்துமின்றி சுகமாகப் பிரசவம் நடைபெறுகின்றது. இதிலும் சிக்கல் ஏற்படுவதுண்டு. அகன்ற வாயுடைய இடுப்பெலும்புக் கட்டினையுடைய பெண்கள் எளிதாகக் கருவுயிர்க்கின்றனர். குறுகிய வாயினையுடைய இடுப்பெலும்புக் கட்டினையுடைய பிரசவத்தில் மிக்க தொந்தரவுகளை அடைகின்றனர். சிறுவயதில் நல்ல ஊட்டமுள்ள உணவு இல்லாவிட்டால் ரிக்கெட்ஸ் (Rickets)