பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழில் அறிவியல் செல்வம் வரம்பின்றியும் போய்க் கொண்டிருக்கும் குறைத்துப் பகுத்தல் செயல் இவ்வாறு வரம்பின்றிப் போவதைத் தடுத்து நிறுத்துகின்றது. இக்கூறியவற்றிலிருந்து ஒரு குறிப்பு நமக்குப் பளிச்சிடுகின்றது. அஃது என்ன? இயற்கையன்னை - புராண முறையில் கூறினால் நான்முகன் - மனிதனைப் படைக்கும்பொழுது அவனிடம் கோடிக்கணக்கான உயிரணுக்களைத் தருகின்றாள். இவற்றை அவன் தன் விருப்பப்படிக் கையாளலாம். இந்த அணுக்களைத் தவிர குறைந்த அளவு எண்ணிக்கையுள்ள கரு உயிரணுக்களையும் eேm cells அவனிடம் தருகின்றாள். அவனிடம் ஒரளவு நம்பிக்கையின்றியே இந்த உயிரணுக்களிலுள்ள பொருள்களை நன்றாக இறுகக் கட்டித் தருகின்றாள் என்றே கருதலாம். இவற்றை அப்படியே வழிவழியாகச் சந்ததியினருக்கு வழங்க வேண்டும் என்றே தருகின்றாள். கரு - உயிரணுக்களில் அடங்கிக் கிடக்கும் மரவு வழிக் கூறுகளை மனிதன் தவறாகக் கையாளவும் முடியாது; அவற்றைத் தம் விருப்பப்படி மாற்றி அமைக்கவும் முடியாது என்று கருதியே இத்தகைய முறையை அவள் கையாண்டுள்ளாள் என்று எண்ணத் தோன்றுகின்றது. (2) மரபுவழி இறங்காப் பண்புகள் : உயிரியல் மரபுரிமை பற்றி அண்மைக்காலத்தில் கண்டறியப் பெறும் அறிவியல் உண்மைகள் இதுகாறும் நம்பிக்கையாகக் கொண்டிருந்த பல கருத்துகளை முற்றிலும் தவறு எனக் காட்டிவிட்டன. பொய் என மெய்பித்து விட்டன. உடலனுக்களில் நடைபெறும் எந்தவிதமான நிறக்கோல்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்ற உண்மையே பல நம்பிக்கைகளை மாற்றி விட்டன. ". . . (அ) நாம் ஒருதலைமுறையில் நம்மை மேம்பாடு அடையச் செய்யும் ஏற்பாடுகள் யாவற்றையும் நம்முடைய கரு அணு மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தலாம் என்று கொண்டுள்ள ந்ம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.