பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 149 அங்ங்னமே நம்முடன் உண்டான குறைபாடுகள் யாவும் கேடுபயக்கக் கூடியவாறு செய்துள்ளயாவும் அடுத்த தலைமுறைக்கு இறங்க முடியாது போகின்றன. எனவே, "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து." என்ற குறளின் கருத்து பிறப்பியல் உண்மைப்படி பொருந்தாத கூற்றாகின்றது. வள்ளுவர் பெருமானின் கூற்றினை பொய்யென்று அவ்வளவு எளிதாகத் தள்ளிவிட முடியாது. அறிவு மரபுவழியாக இறங்கும் என்று ஒப்புக் கொள்ளாமல் சூழ்நிலையால் - அடுத்த தலைமுறைக்கு முந்திய தலைமுறை அளிக்கும் வாய்ப்புகளால் கடத்தப் பெறுகின்றது என்று கொண்டால், இவ்வுண்மை ஓரளவு பொருந்தும் கூற்றாக அமைகின்றது. நம்முடைய குழந்தைகட்கு நாம் கடத்துவன நிறக்கோல்களே, நம்மிடம் நேரிடும் மாற்றங்கள் யாவும் நம்முடைய நிறக்கோல்களையோ அவற்றின் ஜீன்களையோ மாற்றுவதில்லை. இதனை ஒர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். நம் உயரமுள்ள ஒருபிளாஸ்டிக் மனித சிலை ஒன்றைச் செய்வோம். அதனுள் அச்சிலையைப் போன்ற கோடிக் கணக்கான நுண்ணிய பல படிவங்கள் தனித்தனியான சிமில்களில் வைத்து அடைக்கப் பெற்று. அதனுள் வைக்கப் பெற்றுள்ளன என்று கொள்வோம். இப்பொழுது பெரிய சிலையின் மூக்கினைத் திருகி அவ்வுருவத்தை நிலைகுலையச் செய்வோம். இப்பொழுது அச்சிலையினுள்ளிருக்கும் நுண்ணிய சிலைகள் யாவும் மூக்குத் திருகப் பெற்று றிலைகுயையுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை தெளிவாகும். நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் யாவும் நம்முடைய பிள்ளைகட்குக் கரு அணுக்கள் மூலம் கடத்தப் பெறும் என்று கருதுவது இதனைப் போன்றதே. சீனர்கள் தம் குழவிகளின் பாதங்கள் இறுகப் பிணைத்துச் சிறியனவாக் அமைத்தபோதிலும், அங்ங்னமே இஸ்லாமியர்கள் யூதர்கள் 5. குறள் - 398.