பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பொழிவு நாள் 26-2-98 முற்பகல் ~~ 叙 路 登 窦 யற்பியல் நோக்கில் தலைவர் அவர்களே, தமிழ்ச் சான்றோர்களே, மாணவ மணிகளே! வணக்கம். இன்று டாக்டர் எஸ். சாமிமுத்து அறக்கட்டளை சொற்பொழிவுகணை நிகழ்த்த உங்கள் முன் வந்து நிற்கின்றேன். அறிவியல் தமிழ் பற்றி பேசுவதற்கென அறக்கட்டளை நிறுவிய டாக்டர் எஸ். சாமிமுத்துவின் முன்னேற்ற நோக்கத்தைத் தமிழுலகம் பாராட்டக் கடமைப் பட்டுள்ளது. பொதுமக்களிடம் தமிழுணர்வு மட்டிலும் ஏற்பட்டால் போதாது. எ ல் லா வித முன்னேற்ற ங்க ளு க்கு ம் அடிப்படையாகவுள்ள அறிவியல் உணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது இந்தக் கருத்தின் அடிப்படையில் என் சொற்பொழிவின் தலைப்பை தமிழில் அறிவியல் செல்வம் என்ற பொதுத்தலைப்பாக அமைத்துக் கொண்டேன். இதில் முற்பகல் சொற்பொழிவை இயற்பியல் நோக்கிலும் பிற்பகல் பொழிவினை உயிரியல் நோக்கிலுமாக அமைத்துக் கொண்டேன். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது ஆன்றோர் மொழி. நமக்கு உண்டி கொடுப்பவன் சூரியன். சூரியன் இல்லையேல் இப்பூமியில் உயிரினங்களே இல. ஆகவே சூரியனை முதலாகவும் அடுத்து அணுவாற்றல் என்பது பற்றியும், அதனை அடுத்து விண்வெளிப் பயணம் என்பது பற்றியும் பேசக் கருதியுள்ளேன். ஆகவே என் முற்பகல் பேச்சில், 1. சூரியன் 2. அணுவின் ஆற்றல் 3. விண்வெளிப் பயணம் என்பவை பகுதிகளாக அமைகின்றன. ஆகவே சூரியன் முதற்பகுதியாக அமைகின்றது. ހ؛ޓޫ-މޮޑް...