பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழில் அறிவியல் செல்வம் 1. சூரியன் இவ்வுலகில் மக்களாய்ப் பிறந்தவர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலில் ஈடுபடுகின்றனர். உழைப்பதற்குச் சக்தி வேண்டும். அச்சக்தியைப் பெறுவதற்கு உணவு உட்கொள்ள வேண்டும். ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்? இந்த உடல் இயங்குவதற்குக் கூட - நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் இயங்குவதற்குக் கூட சக்தி வேண்டும். இங்கு உங்கள் முன் பேசுவதற்குக் கூட சக்தி வேண்டும். இதனைக் காலையில் உண்ட இரண்டு இட்லி, தோசை அல்லது பொங்கலின் மூலம் சக்தியைப். பெறுகின்றோம். இவையெல்லாம் சக்தியைத் தரும் சூரிய மின்கலம் Sdarbattery) என்று சொல்லாம். இவையெல்லாம் சூரியனிடமிருந்து பெறும் ಶ್ಗ அமைந்தவை. ஆதலால் உணவிலிருந்து என் பேச்சு தொடங்குகின்றது. சூரியனே நாம் உட்கொள்ளும் உணவு உற்பத்திக்கு முதற்காரணம் ஆவதால் அவனைப் பற்றிய சில செய்திகளைக் கூறும் ப்ோக்கில் முதற்பொழிவினைத் தொடங்குகின்றேன். . சூரியனைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது பாரதியாரின் ஞாயிறு வணக்கப் பாடல் நினைவிற்கு வருகின்றது. காதல் கொண்டனை போலும்மண் மீதே கண்பிறழ் வின்றி நோக்குகின் நாiே மாதர் பூமியும் நின்மிசைக் காதல் . மண்டி னாள்,இதில் ஐயமொன் றில்லை; சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்று கின்ற புதுநகை என்னே! ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே, ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.' - என்பது பாடல். இதில் கவிஞரின் சிந்தனை நிழலிடுகின்றது. ஞானியர் காண்கின்ற ஆழ்ந்த நோக்கைச் சில சமயம் கவிஞர்களும் காண்கின்ற்னர் என்பதற்கு இஃது ஒர். எடுத்துக்காட்டு. இது கருதியே கம்நாடனும், . கவிகளாகுவார் காண்குவர் மெய்ப் பொருளே’ என்று கூறிப் போந்தான். 1. பா.க. ஞாயிறு வணக்கம் - 2 2. கம்பரா.