பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 5 பாடலின் உட்பொருள் : இவண் குறிப்பிட்ட பாடலை நோக்குவோம். கதிரவனைக் காதலனாகவும் பூமியைக் காதலியாகவும் காண்கின்றார் கவிஞர். இந்த இரண்டு பொருள்களும் காதலன் - காதலி தரிசனம் தந்து நிற்கின்றன கவிஞருக்கு ஆம், உண்மையும் அதுதானே. இந்த இரண்டும் இணைந்து இயங்குவதால்தான் இவ்வுலகிலுள்ள நிலைத்தினையும் இயங்குதினையும் தோன்றி நிலைபெற்றுள்ளன. செம்பொன்னை உருக்கி வார்த் க் காட்சி அளிக்கும் அந்தி வான் செக்கரழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் அழகும், அத்தண்புனல் மணற்கற்களை அரித்தோடும் அருவியின் அழகும் பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொருள்களின் அழகும், அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பகங்கொடிகளின் அழகும், அவற்றினின்றும் அரும்பியுள்ள நகை மலரின் அழகும்" நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. கதிரவன் - பூமி என்ற இரண்டும் கலந்து வாழும் வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகள் இவை. ஆற்றலின் மூலம் : கதிரவனே ஆற்றலின் மூலம்" என்பது இன்றைய அறிவியல் அறிவிக்கும் உண்மை. ஏராளமான ஆற்றல் அல்லது கதிர் வீசு ஆற்றல் கதிரவனிடம் உற்பத்தியாகின்றது. அது விசும்பு வெளியைக்கடந்து, விநாடியொன்றுக்கு 1,88,000 மைல் வீதம் விலைந்து வந்து பூமியை அடைகின்றது. அது நம்மை வந்து அடைய 8 மணித்துளிகள் ஆகின்றன. கதிரவனின் உட்புறத்திலுள்ள வெப்பம் 20,000,000 அங்குலத்திற்கு 15,000,000,000 இராத்தல்களாக உள்ளது. இவ்வளவு வெப்பமும், அமுக்கமும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதால்தான் கதிரவனிடம் உள்ள கோள்நிலை எலக்ட்ரான்கள் Planator electrons) முற்றிலும் உதிர்க்கப் பெறுகின்றன. கதிரவனிடம் இரண்டு புரோடான்களும் இரண்டு நியூட்ரான்களும் இணைந்து பரிதிய உட்கருன்ை (Heinrயcleus, இயற்றுகின்றன. இதனால் அதிகமான வெப்பம் விடுவிக்கப் பெறுகின்றது. ஒவ்வொரு நொடியிலும் கோடானு கோடி உட்கருக்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. 3. திரு.வி.க. முருகன் அல்லது அழகு 4. The sun is the ultimate source of energy.