பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 183 இரண்டாவது : மரபுவழியாகப் பெற்ற வலிமையையும் வலியின்மையையும் (திட்டமான நோய்கள் குறைகள் பொதுவாக எதிர்த்து நிற்க வல்ல, கூறுகள் ஆகியவை) குறிப்பாக நம்முடைய பாலையும் பொறுத்தது. மூன்றாவது : எதிர்பாராத தற்பேறு. கடந்த கால மக்கள், இன்றைய மக்கள் இவர்களது வாழ்நாளின் வேறுபாடுகளும், அங்ங்னமே பிற்போக்கு மக்கள் முற்போக்கு மக்கள் இவர்களின் வாழ்நாளின் வேறுபாடுகளும் பெரும்பாலும் மரபு வழியை விடச் சூழ்நிலையையே பொறுத்திருப்பதால் சூழ்நிலைக்கு ஈண்டு முதலிடம் தரப்பெற்றுள்ளது என்பதை அறிதல் வேண்டும். சில நம்பிக்கைகள் : மீண்டும் இளமையளித்தல் பற்றி நம் நாட்டிலும் மேல் நாடுகளிலும் சில நம்பிக்கைகள் எழுந்துள்ளன. - - - ( சில ஹார்மோன்களால் இளமையைத் திரும்பவும் பெற முடியும் என்று நம்புகின்றனர். பால்சுரப்பிகளின் சாரத்தைக் குத்திப்புகுத்தல், விரைச்சுரப்பி அறுவை முறைகள், பால்சுரப்பித் தும்புகளை வெட்டி ஒட்ட வைத்தல் ஆகியவை இன்று பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்ல மெல்லப் போய்விட்டன. ( காய கல்ப்பம் என்ற முறையில் ஆயுளை நீட்டித்து இளமை திரும்பச் செய்யலாம் என்பது இலக்கியங்கள் மூலம் அறிவது. - - (iii) உணவு முறைகளைக் கொண்டு வாழ்நாளை நீட்டிக்கலாம் என்று நம்புகின்றனர். உணவிலுள்ள நியூக்லிக் அமிலம் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கின்றது என்பது அவர்களது நம்பிக்கை. - நவீன ஆய்வுகளால் நுண்ணிய குருதிக் குழல்கள், இதயம், சிறுநீரகங்கள், பிறஉறுப்புகளைச் சீர்கேடடையச் செய்யும் நோய்களைக் குறைப்பதற்கும் முறைகள் கண்டறிய பெற்று