பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழில் அறிவியல் செல்வம் வருவதால் இத்துறையில் நமது நம்பிக்கை வளர்ந்து வருகின்றது. அங்ங்னமே, சூழ்நிலையினால் நேரிடும் விபத்துகளையும் குறைப்பதற்கு வழிகள் கண்டறியப் பெற்று வருவதால் மரபு வழியாகப் பெற்ற ஆயுட்காலம் தானாகச் சற்று நீளலாம் என்பதற்கு யாதொரு ஐயமும் இல்லை. (2) கால்வழிஇயலில் புரட்சி : ஊனக்கண்ணுக்குப் புலனாகாத அணுபுரியும் அற்புதத் திருவிளையாடல்களைப் போலவே, உயிரியலும் (Biologu) விலங்கியலும், தாவர இயலும் இராமலக்குமனர்போல் இணைந்துள்ள ஒர் அறிவியல்துறை - ஜீன் என்ற ஓர் அற்புத நுண்ணிய உயிரணு புரியும் திருவிளையாடல்களையும் சொல்லி முடியா எழுதியும் முடியா. இது வேளாண்மை, மருத்துவம், தாவரஇயல், வி ல ங் கி ய ல் போ ன் ற து ைற க ளி ல் புரி யு ம் திருவிளையாடல்கள் மனித நலத்திற்கே உரியவையாகத் திகழ்கின்றன. இதில் கற்றது கைமண்ணளவாகவும்: கல்லாதது உலகளவாகவும் உள்ளது. மிகச்சிறிய பகுதியை மட்டிலும் உங்கட்குக் காட்டினேன். இத்துடன் இது நிற்க, &mioghuá – elonarégiales intross® (Fifteenth Internaitonal Congress of Genetics) už $15Ti Gair (1983 -ggb gțašīG Lą rubl if திங்கள்) தில்லி மாநகரில் நடைபெற்றது. ஐம்பது நாடுகளிலிருந்து சுமார் 2500 கால்வழி இயல் (Genetics) அறிஞர்கள் கலந்து கொண்டு தாம் கண்ட உண்மைகளையும், இனி தாம் கண்டிறிய வேண்டிய உண்மைகளையும் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் கலந்து ஆய்ந்தனர். முன்னேற்றமடைந்த நாடுகளில் ஆராய்ந்து கண்ட கால்வழிஇயல் உண்மைகளை முன்னேறி வரும் நாடுகட்கு எங்ங்ணம் பயன்படுத்தலாம் என்று கலந்து பேசினர். இந்த மாநாட்டில் நோபெல் பரிசு பெற்ற மூன்று கால்வழிஇயல் அறிஞர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். மாநாட்டில் உலக அறிஞர்களின் கவனத்திற்கு வந்த சில உண்மைகளை ஈண்டுக் காட்டுவேன்.