பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 9 இந்தச் சூரியனைப் பூமி சுற்றுகின்றது; பூமியை அம்புலி வலம் வருகின்றது. இந்தமூன்றையும் கொண்டு மனிதன் காலத்தை அளவுடுகின்றான்; பூமி தன்னைத்தானே சுற்றுவது ஒரு நாள் பூமியை அம்புலி வலம் வருவது ஒரு திங்கள். இந்த இரண்டும் சூரியனை வலம் வருவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் ஒர் ஆண்டு. ஒரு நாளை அளப்பதற்கு மனிதன் கண்டறிந்தது மணிப்பொறி. இதில் அடங்கியுள்ளவை மூன்று முட்கள். ஒரு சிறியமுள் பகலைப் பன்னிரண்டு மணியாகவும். இரவைப் பன்னிரண்டு மணியாகவும் பிரித்துக் காட்டும். பெரிய முள் நிமிடத்தையும், சிவப்பு முள் நொடியையும் அளந்து காட்டும் இம்மூன்றும் ஒன்றாக இணைந்து தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்து வருகின்றன. மனிதன் நள்ளிரவிலும் இந்த மணிப்பொறியைக் கொண்டு காலநிலையை அறுதியிட முடிகின்றது. தான் கண்டறிந்த இந்த மணிப்பொறிக்கே மனிதன் அடிமைப்பட்டு நடப்பதே அற்புதம். உலகம் முழுவதையும் இச்சிறு பொறி ஆட்டி வைப்பது அற்புதத்திலும் அற்புதம்: வைணவ தத்துவங்களில் ஒன்றாகிய அசித்து' சுத்த சத்துவம், மிச்ரதத்துவம், சத்துவ சூனியம் என மூவகைப்படுத்திப் பேசப்பெறும். சத்துவ சூனியம் என்பது கால தத்துவம் காலம் என்பது எங்கும் பரந்து நிற்கும் ஒரே திரவியம்; அருவப்பொருள். இதன் கூறுகள்பற்றி விஷ்ணு புராணத்தில் விரிவாகப் பேசப் பெறுகின்றது. இக் காலத்துவம் ஈசுவரப் படைப்பின் பரிணாமங்கட்குக் காரணமாய், அவனுடைய படைப்பு அளிப்பு அழிப்பு ஆகிய அலகிலா விளையாட்டிற்குப் பயன்படுகின்றதாகக் கூறுவர். வள்ளுவப் பெருந்தகை காலத்தைப் பற்றி ஒரு குறளில் கூறுவா, நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வாற் பெறின்." இதில் நாள் என்பதை உயிரின் வாழ்நாளை இடைவிடாது அறுத்துக் கொண்டிருக்கும் வாள்' என்கின்றார் அப்பெருந்தகை தவிர, காலம் என்பது அருவப் பொருள். முத்தி நெறி கடிதம் 5 பக். 45-46) குறள் - 331.