பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t{} தமிழில் அறிவியல் செல்வம் ஆதலால் இதனை அளத்தல் இயலாது. அளந்து விட்டதாகக் கருவதுவது கற்பனை. இக்குறளுக்கு உரை கூறும் பரிமேலழகர் கூறுவார்: "காலம் என்னும் அருவப் பொருள் ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாகக் கொள்ளப் படுவதன்றித் தானாகக் கூறுபடாமையின், . என்று கூறுவதால் இதனைத் தெளியலாம். இத்துடன் இது நிற்க, 2. அணுவாற்றல் அணுவாற்றலைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது கம்பராமாயணப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது. பேராற்றல் படைத்த மேகநாதன் இலக்குவனுடன் உடற்றிய போரில் இறந்து படுகின்றான். இச்செய்தியை அறிந்த மண்டோதரி மேகநாதனின் அன்னை - பலவாறு புலம்புகின்றாள். தன் அருமை மைந்தனின் அளவற்ற ஆற்றலை எண்ணி எண்ணி ஏக்கமுற்றுப் புலம்புகின்றாள். முக்கணான் முதலி னோரை உலகொரு மூன்றி னோடும் புக்கபோர் எல்லாம் வென்று நின்றனன் புதல்வன் போலாம் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு உக்கிட அனுவொன்று ፵ሄዱ உதைத்தது போலும் அம்மா என்பது கம்பநாடனின் திருவாக்கு. அக்காலத்தில் அணு - அண்டம், சிறியது பெரியது என்ற கருத்தில் மட்டிலும் ஆளப்பெற்று வந்தது. இது கருதிதான் முக்கண்ணானையும் வாகை சூடியவன் இன்று ஒரு மனிதனால் கொல்லப்பட்டது மேருமலையை அணுவொன்று ஒடி உதைத்ததுபோல் உள்ளது என்று கூறப் பெற்றுள்ளது. அணுவின் ஆற்றல் ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு ஜப்பான் நகர்களில் வீழ்த்தப்பெற்ற அணுகுண்டுகளின் திருவிளையாடலுக்குப் பிறகு மக்கள் அணுவின் அளப்பரிய ஆற்றலை அறிந்தனர். இன்று அணுவின் ஆற்றலைக் கண்டு உலகமே நடுங்குகின்றது. இரஷ்யாவும் அமெரிக்காவும் 11. கம்பர யுத்த இராவணன் சோகம் - 52.