பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் #5 சுழிகள் (பூஜ்யம்) போடவேண்டும். சுருக்கி எழுதினால் 6:10’ என்று ஆகும். இதனை வினாடிக்கு ஓர் எண் வீதம் எண்ணினால் ஒராண்டில் ஒருவரால் எண்ணி முடியக் கூடியது. முன்று கோடியே பதினைந்து இலட்சத்து முப்பத்து ஆறாயிரம். நாற்பது கோடி மக்களும் அந்த அணுக்களை எண்ணுவதில் ஈடுபட்டால் எண்ணி முடிய 5000 ஆண்டுகள் ஆகும். அவர்கள் கலியுகம் பிறந்ததிலிருந்து இந்த நூற்றாண்டு வரை எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது அணுவின் நுட்பமும் எண்ணிக்கையின் பெருமையும் ஒரளவு நமக்குப் புலனாகும். அணு வகைகள் : அணு என்றால் என்ன? ஒரு பொருளை உடைத்துக் கொண்டே போனால் இறுதியில் எஞ்சி நிற்பபது அனுத்திரளை மூலக்கூறு (Molecule என்றும் இதனை வழங்குவர். அணுத்திரளையையும் வேதியியல் மாற்றத்தால் உடைக்கலாம். அவ்வாறு உடைத்தால் மிஞ்சி நிற்பது அணு. இவ்வாறு அணு அணுவாகப் பிரிபவையே உலகத்தின் அடிப்படைப் பொருள்கள் இவற்றை அடிப்பொருள்கள் அல்லது தனிமங்கள் (Elements) என்று வழங்குவர். பொருள்களை அணுஅனுவாக உடைத்தபொழுது இந்த உலகில் 92 வகையான பொருள்கள் இருக்கக் கண்டனர் அறிவியலறிஞர்கள். இந்த 92 வகைப் பொருள்களும் தம்மொடு தாமும் பிறிதுமாகச் சேர்ந்து அனுத் திரளைகளாகின்றன. இப்படிப்பட்ட சேர்க்கைப் பொருள்கள் (Coாpounds) இவ்வுலகில் ஏழு இலட்சத்துக்கு மேலும் உள்ளன என்று அவர்கள் கணக்கிட்டுள்ளனர். எனவே அணுக்களின் திரட்சியே அண்டங்களாகின்றது என்பது பெறப்படுகின்றது. வழக்கிலுள்ள பொருட்கள். இவ்வுலகிலுள்ள பொருள்களில் அடிப்படையானவை 92 என்று மேலே கண்டோம். எனினும், வழக்கிலுள்ளவை பன்னிரண்டுக்குமேல் இல்லை என்பதை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இது வியப்பினும் வியப்பு. உலகிலுள்ள பொருள்களை 1000 கூறுகளாகப் பகுத்துக்கொண்டால் ஏறக்குறைய பாதி, அதாவது 492 பங்கு உயிரியம் (Oxygen), இந்த உயிரியம் காற்றில் ஐந்தில் ஒரு பங்கு நீரில் ஒன்பதில் எட்டு பங்கு. இது கல்லிலும் காணப்படும் பொருளாகும். சிலிக்கன் என்பது 25 பங்கு; இது தரையில் நான்கில் ஒரு பங்கு. மணலெல்லாம்